உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் பிற்போடப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆங்கில ஊடகம் ஒன்றின் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் விரைவில் நடைபெறப்போகிறது என்ற தோற்றம் சில நாட்களுக்கு முன்னர் இருந்தது.
இதன்படி ஜனவரி 20ஆம் திகதி அந்த தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. எனினும் அது தற்போது பின்தள்ளிப்போகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மிக நீண்ட கால கோரிக்கையான நுவரெலிய மாவட்டத்தின் பிரதேசசபைகளை அதிகரிக்கும் திட்டம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் தாமத தகவலை உள்ளூராட்சித்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா மறுத்துள்ளார்.
நுவரெலிய பிரதேசசபைகளுக்கான பரிந்துரைகள் இரண்டு வாரங்களுக்குள் வர்த்தமானிப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்