எம்.வை.அமீர்
சாய்ந்தமருதில் பொதுச்சந்தை, வர்த்தக நிலையங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தராத நிலையும், வங்கிகள் அரச நிறுவனங்கள் என்பன உத்தியோகப்பற்றற்ற முறையில் மூடிய நிலையிலும் உள்ளூர் வீதிகள் வெறிச்சோடிய சூழலும் காணப்படும் அதேவேளை சாய்ந்தமருது முடங்கிய நிலையில் காணப்படுகின்றது.
சாய்ந்தமருது மக்களால் அந்த ஊரின் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலை முன்னிறுத்தி முன்வைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சிசபை கோரிக்கை இழுத்தடிக்கப்படும் நிலையில், தங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித்தருமாறு வேண்டி 30,31 மற்றும் 01 ஆம் திகதிகளில் பூரண கடையடைப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
2017-10-29 ஆம் திகதி பள்ளிவாசல் முற்றலில் இடம்பெற்ற திரளான மக்கள் முன்னிலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, குறித்த கடையடைப்புப் போராட்டம் அப்பிரதேச வர்த்தக சங்கதத்தின் பூரண சம்மதத்துடனேயே இடம்பெறுவதும், மூன்று நாட்களுக்கும் நோன்பு நோற்று இறைவனை மன்றாடுவதும், அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அழுத்தங்களைக் கொடுக்கும் நோக்கிலேயே குறித்த போராட்டம் ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.