அக்கரைப்பற்று மக்கள் நன்றி றக்காதவர்கள் அல்ல அக்கரைப்பற்றின் அபிவிருத்திகளை முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தனது நேரடி கண்காணிப்பில் களத்தில் நின்று செய்தவைகளே அதிகமாக இன்றும் காட்சியளித்துக்கொண்டிருக்கின்றன. எனவே அந்த சேவைகளை அனுபவிக்கும் எந்தவொரு ஊர் மகனும் அதாஉல்லாவை மறக்க மாட்டான் என்பதனால் ஊருக்குள் இருந்து கொண்டு மக்களைக் கூட்டிக்கொடுக்கும் அரசியல்வாதிகளை மக்கள் எதிர்வரும் தேர்தலில் படுதோல்வி அடையவைப்பார்கள் என அதாஉல்லாவின் தீவிர ஆதரலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடந்த காலங்களில் அதனை ஒரு பாடமாகக் காட்டியிருக்கிறார்கள் வெறும் 1700 வாக்குகளே அக்கரைப்பற்றில் இருந்து பிரிந்த வாக்குகளாக இருக்கும் இந்நிலையில் இன்று பல கட்சிகளின் ஊடுருவல் அவர்களையே அதிகமாகப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனவே எதிர்வரும் மாநகர சபைத் தேர்தலில் அனைத்து வட்டாரங்களையும் தேசிய காங்கிரஸ் அமோக வாக்குகளால் வெற்றியீட்டி மீண்டும் அதாஉல்லாவின் கோட்டையாக அக்கரைப்பற்று மாநகரம் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியன திகழவிருக்கிறன.
ஊரில் இருக்கும் அரச சொத்துக்களை விற்றுப்பிளைத்த அரசியல்வாதிகள் அதன் பின்னர் மூக்குடைபட்டு அடங்கும் நிலையேற்படும் என்பதில் சந்தேகமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்
ஆகவே எந்த கட்சிகளின் ஏஜண்டுகளுக்கும் அக்கரைப்பற்றில் இடமில்லை என்பதே இன்றய கருத்தாகவும் மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றன
அதனால் அதிகம் துள்ளும் அரசியல்வாதிகள் அடங்கும் காலம் விரைவில் உள்ளதால் நாம் அமைதிகாத்து இருக்கிறோம் என்று தெரிவித்த உறுப்பினர்.
நடக்கவிருக்கும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் எமது தேசிய காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் பலதைக் கைப்பற்றும் நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏராளமான இளைஞர்கள் உண்மையின் பக்கம் வந்து கொண்டிருக்கின்றனர்.
அதனால் நாம் அக்கரைப்பற்று மாநகரம், அக்கரைப்பற்று பிரதேச சபை, நிந்தவூர், பொத்துவில், இறக்காமம், அட்டாளைச்சேனை போன்ற சபைகளை கைப்பற்றும் நடவடிக்கைகள் மும்முறமாக நடந்து கொண்டு வருகின்ற இவ்வேளை உண்மையின் பக்கம் அனைத்து இளைஞர்களையும் அணிதிரண்டு வருமாறு அழைப்பு விடுக்கின்றார் தேசிய காங்கிரசின் தேசிய தலைவர் முன்னாள் பல அமைச்சுக்களை வகித்து பாரிய சேவைகளைச் செய்த ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் என்று தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.