திறமைவாய்ந்த எல்லாவகையான ஊடகவியல் செய்திசேகரிப்பு செயற்பாடுகளும் ஏதோ ஒரு அளவில் புலனாய்வு விசாரணைகளுடன் சம்பந்தப்பட்டேயிருக்கும். பொதுமக்களின் நலன்கள் சம்பந்தப்பட்ட ஒரு தகவல் யாரோ ஒருவரால் இரகசியமாகக் காப்பாற்றப்பட்டால் அல்லது ஒளித்துமறைக்கப்பட்டால், அதைக் கண்டுபிடித்து வெளிப்படுத்துவதற்கு முயற்சிக்கின்ற செய்தியாளர்களின் செயற்பாடுதான் புலனாய்வுச் செய்தியியல் எனப்படும்.
புலனாய்வுச் செய்தியியலின் பண்புகள்
1. வாசகர்களுக்கு முக்கியத்துவம் மிக்க ஒன்று.
2. திரிவுபடுத்தப்படாது அச்சொட்டான விடயமொன்று அறியப்படவேண்டியநிலை.
3. அதில் ஏதோவொரு இரகசியம் இருத்தல், முன்னரெப்போதுமே செய்தி தெரிவிப்புக்குட்படாத விடயம், யாரோ ஒருவர் மூடிமறைக்க முற்படும் விடயம்.
4. புலன்விசாரிப்புக்கான மனோபாவங்களைப் பயன்படுத்துக.
5. நீங்கள் கிரகிக்கும் விடயங்களை கேள்விக்கு உட்படுத்துதல்.
6. மாற்று உண்மைகளோ அல்லது விளக்கங்களோ (alternative truths or explanations) இருக்கலாமா எனக் கேட்டல்.
7. நீங்கள் கிரகித்த விடயங்கள் வேறு எதையாவது மேலும் ஆலோசிக்கத் தூண்டுகிறதா எனக்கேட்டல்.
8. காசு நகரும் திசையைப் பின்தொடருங்கள். யார் இலாபம் ஈட்டுகிறார்கள்? யார் காசு பெறுகிறார்கள்? நிதியறிக்கைகளையும், வரவு செலவுத் திட்டங்களையும் படித்தறியுங்கள்.
9. மரபுவழியான அறிவை நம்பிப் பின்பற்றாதீர்கள்.
புதிய நிகழ்ச்சிகளையும் ஆரம்பிப்புச் செயற்பாடுகளையும் அறிவிப்பதற்கு பத்திரிகைகள் உதவுகின்றன. இவ்வாறான நிகழ்ச்சிகள், செயற்பாடுகள் முதலியன உண்மையில் நடைபெறுமா என்பதை நாங்கள் சோதித்து அறிந்துகொள்ள வேண்டும்.
பொதுமக்களின் வாழ்க்கைப் பாதுகாப்பையும், பொதுமக்களின் பணத்தையும் துஷ்பிரயோகம் செய்தவர்களையும் சூறையாடியவர்களையும் ஆழமாகத் தோண்டிச்சென்று கண்டுபிடிக்கவேண்டும். இவ்வாறான இரகசியங்கள் தோண்டப்பட்டு வெளிக்கொண்டு வரப்பட்டால் வாசகர்கள் மாற்றம் தேவையென்பதை நோக்கி உறுதியாகச் செயலாற்றத் தொடங்குவர். ஊழல்கள், துஷ்பிரயோகங்கள் முதலியன வெளிக்கொண்டுவரப்படுவதன் மூலம் ஊடகம் சமூகமாற்றத்துக்கான முகவராகிவிடுகிறது. ஒரு சாதகமான விளைவு ஏற்படுகிறபோது புலனாய்வுச் செய்தியியல் பாராட்டப்படுகிறது.
புலனாய்வுச் செய்தியியல் என்பது அதிக மனித உழைப்பையும் காலத்தையும் எடுக்கும் விடயமாகும். தகவல்களையும் உண்மைகளையும் தேடிச் சேகரித்துக்கொள்ளுவதில் ஒரு நுணுக்கமான சமனிலை தேவையானது என்பதையும் தொழினுட்ப உதவி தேவையென்பதையும் அறிந்துகொள்க. உள்ளுணருதலும் புலனுணருதலும் புலனாய்வுச் செய்தியாளருக்குத் தேவையானவை.