தேர்தல்களை உரிய காலங்களில் நடத்துவதனை உறுதிப்படுத்தும் பாரிய கடப்பாடு பாராளுமன்றத்திற்கே உள்ளது எனச் சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மாகாண சபைத் தேர்தல்களை பிற்போடாது உரிய காலத்தில் நடத்தப்படவேண்டியது அவசியம் எனவும் வலியுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கை பாராளுமன்ற ஜனநாயகத்தின் 70 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் விசேட அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பாராளுமன்ற அமர்வின் 70ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்தச் சந்தர்ப்பத்தில் ஜனநாயகம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஜனநாயகம் தொடர்பாக நாம் கண்டுள்ள நிலைகள் பற்றி விவாதிக்க வேண்டியுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் தேசிய பண்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு விவாதங்களின் ஊடாக தவறியுள்ள சந்தர்ப்பங்கள் துரதிஷ்டமானவை. பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்ற விவாதங்களின் தரம் படிப்படியாகக் குறைந்துள்ளமை ஏமாற்றங்களைத் தருகின்றன.
தம்மை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை மக்கள் தேர்தல் மூலம் தெரிவுசெய்தனர். பிரதிநிதிகள் சரியான முறையில் செயற்படாமையே கடந்த மூன்று தசாப்த யுத்தத்துக்கு வழிவகுத்திருந்தது. யுத்தத்தால் ஏற்பட்ட மோசமான அமைப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் நாட்டில் உள்ள பல்லின சமூகங்களுக்கிடையிலான உறவுகளை பலப்படுத்துவதிலும் நம்பிக்கையையும், ஒற்றுமையையும் கட்டியெழுப்புவது தவறவிடப்பட்டுள்ளது. இந்த செயற்பாடானது மோசமான மனநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்தகைய நிலைமைக்கு இந்தப் பாராளுமன்றமும் வழிவகுத்துள்ளமையானது துரதிஷ்டவசமானதொன்றாகும்.
பாராளுமன்ற பெரும்பான்மையானது ஆட்சியமைப்பதற்கு முக்கியமாக இருக்கின்றது. ஆனால் மாற்றுக் கருத்துக்களுக்கான அல்லது அதிருப்தியான கருத்துக்கள் தொடர்பான வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு சந்தர்ப்பங்கள் குறைவாகவே இருக்கின்றன. பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் மாற்றுக் கருத்துக்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் தேசியத்துக்கு எதிரானதாகவும் பார்க்கப்படுகின்றது.
இதுவொரு கவலைக்கிடமான நிலைமையாகும். தற்பொழுது புதிய அரசியலமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதன் ஆரம்ப நிலையில் இருக்கின்றோம். கடந்தகால தவறுகளை தவிர்ப்பதற்காகவே இந்தச் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற முறை தொடர்பில் விவாதிக்க வேண்டியதொரு நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது. எந்தவொரு மறுசீரமைப்பு முன்வைக்கப்பட்டாலும் அது வெளிப்படையானதாக இருக்கவேண்டும். அதேபோன்று அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். அதேபோன்று உயர்ந்த தரமுடையதாகவும் இருக்க வேண்டும். கட்சி சார்ந்த அரசியலுடன் இவை மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடாது என்றார்.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற முறை தொடர்பில் விவாதிக்க வேண்டியதொரு நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது. எந்தவொரு மறுசீரமைப்பு முன்வைக்கப்பட்டாலும் அது வெளிப்படையானதாக இருக்கவேண்டும். அதேபோன்று அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். அதேபோன்று உயர்ந்த தரமுடையதாகவும் இருக்க வேண்டும். கட்சி சார்ந்த அரசியலுடன் இவை மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடாது என்றார்.