ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வண்ணம் நடந்துகொண்ட சம்பவமானது திட்டமிட்ட அமைதியை சீர்குலைக்கும் ஒரு சம்பவமாகும். இதனுடன் தொடர்புடைய பலர் விரைவில் கைது செய்யப்படுவர் என பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அத்துடன், இச் சம்பவம், சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அவப் பெயரைக் கொண்டு வரும் இத்தகைய சீர்குலைவுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் கைது செய்யப்படவேண்டிய பட்டியலில் உள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்ததாவது;
“அகதிகள் மீதான அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் மிகத் திட்டமிட்ட, நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும், அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை. இதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த விடயத்தில் இன்னும் எத்தனை பேர் கைது செய்யப்படுவர் என துல்லியமாகக் கூற முடியாது. எனினும் இன்னும் பலர் கைது செய்யப்படுவர். அவர்களில் தேரர்களும் உள்ளடங்குகின்றனர். அவர்களை கண்டிப்பாக கைது செய்வோம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதன் பின்னர் இந்த சதி நடவடிக்கையின் பின்னணி நோக்கம் குறித்து துல்லியமாக வெளிப்படுத்த முடியும்.

தற்போதைக்கு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள பல்வேறு தகவல்கள் மற்றும் சான்றுகளை மையப்படுத்தி விசாரணை தொடர்கிறது”. என்றார்.