நமது நாட்டில் மாட்டிறைச்சி வியாபாரம் செய்வோர் முஸ்லிம் வியாபாரிகள் மாத்திரம்தான். இந்நாட்டில் இவ்வியாபாரம் அவ்வப்போது தடை செய்யப்படும் அளவுக்கு பேசப்படுவதும் உண்டு.
நாம் பேச வருவது என்னவென்றால் நமது ஊர்களில் மாட்டிறைச்சி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்கிறார்கள். மாட்டிறைச்சி ஒரு கிலோ 800/= ரூபாய். இந்த விலை நிர்ணயத்தை செய்தது யார்?
மட்டக்களப்பு பிரதேசங்களில் வெறும் 650/= ரூபாய் விற்பனை செய்கின்ற போது நமது பிரதேசங்களில் ஏன் இந்த அதிக விலை?
மட்டக்களப்பு பிரதேசங்களில் வெறும் 650/= ரூபாய் விற்பனை செய்கின்ற போது நமது பிரதேசங்களில் ஏன் இந்த அதிக விலை?
பின்னேரங்களிள் மாட்டிறைச்சி கடைகளை பார்த்தால் நல்ல கட்டி இறைச்சிகள் தொங்கிக் கொண்டிருக்கும் இதற்கு காரணம் காலை வேளையில் இறைச்சி வாங்க வரும் பொது மக்களுக்கு அதிகமாக கழிவுகளை போட்டு கொடுக்கிறார்கள். ஒரு கிலோ இறைச்சி வாங்கினால் அதில் அரை கிலோ வெறும் கழிவுகள்.
மாட்டிறைச்சி வியாபாரிகளே! ஏன் இந்த கலப்படம்?
சாப்பாட்டு கடைகளில் மாட்டிறைச்சி சாப்பாட்டை விட கோழி இறைச்சி சாப்பாட்டிக்குத்தான் விலை அதிகம் ஆனால் கோழி இறைச்சி விலை மாட்டிறைச்சியில் விலையை விட அரைக்கரைவாசி குறைவு.
சாப்பாட்டு கடைகளில் மாட்டிறைச்சி சாப்பாட்டை விட கோழி இறைச்சி சாப்பாட்டிக்குத்தான் விலை அதிகம் ஆனால் கோழி இறைச்சி விலை மாட்டிறைச்சியில் விலையை விட அரைக்கரைவாசி குறைவு.
எனவே மாட்டிறைச்சி வியாபாரிகளே! ஏன் மாட்டிறைச்சி விலையை உயர்த்தி உள்ளீர்கள்?
மாதாந்தம் வரி வசூல் செய்யும் பிரதேச சபை, கடைகளை குத்தகைக்கு விடும் பள்ளிவாசல் நிருவாகம் இப்பிரச்சினைகளை ஆராயாதா?
மாதாந்தம் வரி வசூல் செய்யும் பிரதேச சபை, கடைகளை குத்தகைக்கு விடும் பள்ளிவாசல் நிருவாகம் இப்பிரச்சினைகளை ஆராயாதா?