கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்ற அதாவுள்ளாவின் கருத்தை நாம் மறுதலிக்கவில்லை. அதற்கு நாம் அவரை பாராட்டுகிறோம். கிழக்கு பிரிய வேண்டும் என்பதை அதாவுள்ளா சொல்வதற்கு முன்பே கல்முனையில் இருந்து கொண்டு பகிரங்கமாக முதலில் சொன்னவன் நான். அதாவுள்ளா பாதுகாப்பு படையை சூழ வைத்துக்கொண்டு கிழக்கு பிரிய வேண்டும் என்றார். எமக்கு அள்ளாஹ்வின் பாதுகாப்பு மட்டுமே இருந்தது.
ஆனால் அதாவுள்ளா சுமார் 15 வருட அமைச்சர் என்பதை ஒப்பிட்டு பார்க்கும் போது அவர் கிழக்கு முஸ்லிம்களுக்கு பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. குறிப்பாக கல்முனையை முற்றாக ஒதுக்கினார். உலமா கட்சியும் அவர் ஆதரவளித்த மஹிந்தவுடன் இருந்தபோதும் கல்முனை என்பதற்காய் எம்மையும் ஒதுக்கினார். இத்தனைக்கும் 2005 தேர்தலில் அவரால் வாக்கெண்ணும் நிலையத்துக்கு போக முடியாத போது (அப்போது அவருக்கு கட்சியில்லை என்பதால்) எனது கடிதம் பெற்றே சென்றும் நன்றி மறந்தவர் அவர்.
முபாறக் மௌலவி,
உலமாக்கட்சி தலைவர்