எம்.பி பதவி கிடைப்பதற்கு அடுத்த நிமிடமும் அழைப்பு வரலாம்; ஏ.எல்.எம் நசீர்

NEWS
Image may contain: 4 people, people smiling, people standing

ஆதம்பாவா அன்வர்

கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ALM நசீர் அவர்களை இன்று காலை முஸ்லிம் காங்கிரஸின் அதி தீவிர ஆதரவாளர்கள் படையனியொன்று அமைச்சரின் இல்லத்திற்கு சமுகமளித்து வாக்குறுதியழிக்கப்பட்ட தேசிய பட்டியலை தராமல் தலைமை இழுத்தடிப்பது தொடர்ந்தும் அட்டாளைச்சேனை மக்களை ஏமாற்றும் செயலாகவே உள்ளன இதனை எங்களால் ஓருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாதென அமைச்சர் மீது எரிந்து கொண்டே இருந்தனர்

அமைச்சர் அவர்கள் வந்தவர்களிடம் கொஞ்சம் பொறுமையை கடைப்பிடியுங்கள் தலைவர் அவர்கள் எமக்கு தருவதாக சொன்ன தேசிய பட்டியலானது நிச்சயம் கிடைக்கும் அதற்கான காலம் கனிந்துவிட்டது என்றதும் ஆதரவாளர்கள் பொறுமையை மீறி சத்தமிட்டனர் அதற்கு உடனே நசீர் அவர்கள் சொன்ன பதில் தலைவரை யாரும். பிழையாக பேசுவதற்கு அவரை எதிர்க்கும் எந்த வார்த்தையும் எனக்கு பிடிக்காது என ஆதரவாளர்களோடு முறுகிய நிலையில் ஆதரவாளர்களை ஆறுதல் படுத்தினார்

அமைச்சரிடம் ஆதரவாளர்கள் ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதாவது தேசிய பட்டியல் உடனடியாக கிடைக்க வேண்டும் அதவும் கூறுகிய நாட்களுக்குள் கிடைக்கவேண்டும் எனவும் கோசம்போட்டனர் அதற்கு அமைச்சரின் பதிலானது இவ்வாறு அமைந்தது

அதாவது எனக்கு கட்சி என்றால் முஸ்லிம். காங்கிரஸ்தான் கட்சியிலும் தலைவரிலும் நான் அபாரிதமான நம்பிக்கை வைத்துள்ளேன் தலைமையும் என்மீது நம்பிக்கை தந்துள்ளது அந்த வகையில் இவ்வளவு காலமும் பொறுத்து கொண்ட நீங்கள் இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் MP கிடைப்பதற்கு இந்த நிமிடம் கூட அழைப்பு வரலாம் என வந்தவர்களை அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தார்
6/grid1/Political
To Top