Top News

அக்கரைப்பற்று அபிவிருத்தி புரட்சியில் அன்வர்டீன்; அடுத்த கட்டம் இதோ!!



பைஷல் இஸ்மாயில் 

அக்கரைப்பற்று மத்திய மகா வித்தியாலயத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் பிரதம அமைப்பாளர் ஏ.பி.அன்வர்டீன் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகரவிடம்  விடுத்த வேண்டுகோளுக்கமைவாக பிரதி அமைச்சர் தலைமையில் ஒரு குழுவினர் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். 

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகரவின் பிரத்தியேகச் செயலாளர் சம்பத் திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று (28) இந்த கள விஜயத்தை மேற்கொண்டு நீச்சல் தடாகத்தில் ஏற்பட்டுள்ள சகல பிரச்சினைகளையும் பார்வையிட்டதுடன், இப் பிரச்சினை பற்றிய சகலவிதமான ஆவனங்களை ஒரு வாரகாலத்துக்குள் சமர்ப்பிக்கும்படி பாடசாலை அதிபர் யூ.எல்.மன்சூரிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகரவின் பிரத்தியேகச் செயலாளர் சம்பத் திஸாநாயக்க உத்தரவிட்டார்.

விளையாட்டு கலாசாரத்தை உயர்த்தும் நோக்குடனும், மாணவர்களுக்கிடையில் நீச்சல் பற்றிய ஆர்வத்தை உயிர்ப்பிக்கும் நோக்குடன் பாரிய எதிர்பார்ப்புடன் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த நீச்சல் தடாகம் எவ்வித பயன்பாடுகள் அற்றுக் காணப்படுவதை பார்க்கும்போது மனவேதனையாகவுள்ளது. இந்த நீச்சல் தடாகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் குறைபாடுகளை டிசம்பர் மாதத்துக்கு முன்னர் செய்து முடித்து மாணவர்களின் விளையாட்டு கலாசாரத்தை மீண்டும் உயர்ப்பிக்க முயற்சி செய்து கொடுக்கப்படவுள்ளது என்று விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்  இதன்போது கருத்துத் தெரிவித்தார்.


Previous Post Next Post