Top News

பொது பல சேனாவினால் பதிவு செய்யப்பட்டுள்ள மத நிந்தனை வழக்கு ஒத்திவைப்பு



ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் பேசிய உரைக்கு எதிராக பொது பல சேனாவினால் தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு இன்று 11.10.2017 கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதி மன்றத்தில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முஸ்லிம் உரிமைகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் ஆற்றப்பட்ட உரையில் பௌத்த மதத்தை நிந்தித்தார் என்ற குற்றம் சாட்டியே பொது பல சேனா சார்பில் குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இன்றைய விசாரனையில், சகோ. அப்துர் ராசிக் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் விசாரனை நாளான 22.02.2018ம் தேதி வரை நீக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்றைய வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஷிராஸ் நூர்தீன், மைத்திரி குணரத்த அடங்கிய குழுவினர் மன்றில் ஆஜராகினர்.
Previous Post Next Post