Top News

கால்­ந­டை­களை ஏற்றிச் செல்ல அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கு­வதை தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தவும்



கால்­ந­டை­களை ஏற்றிச் செல்­வ­தற்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் வழங்­கு­வதை தற்­கா­லி­க­மாக  இடை­நி­றுத்­து­மாறு ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன பணிப்­புரை விடுத்­துள்ளார்.
சட்­ட­வி­ரோ­த­மாக கால்­ந­டை­களை ஏற்றிச் செல்­வது வேக­மாக அதி­க­ரித்­து­வ­ரு­கி­றது. இதன் மூலம் பாற்­பண்ணைக் கைத்­தொழில் துறைக்கும் விவ­சாயத் தேவை­க­ளுக்கும் பாரிய தாக்கம் ஏற்­பட்­டுள்­ளது.
அந்­த­வ­கையில் கால்­ந­டை­களை எற்றிச் செல்­வது  தொடர்பில் முறை­யான நிகழ்ச்­சித்­திட்­ட­மொன்றைத் தயா­ரிக்­கும்­வரை அதற்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் வழங்­கு­வது தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­ப­ட­வுள்­ளது. தற்­போது கால்­ந­டை­களை ஏற்றிச் செல்­வ­தற்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் பிர­தேச செய­லா­ளர்­க­ளி­னூ­டா­கவே வழங்­கப்­ப­டு­கின்­றன.
சட்­ட­வி­ரோ­த­மாக கால்­ந­டை­களை ஏற்றிச் செல்­லும்­போது ஏற்­ப­டு­கின்ற பார­தூ­ர­மான விபத்­துக்கள், உயிர்ச்­சே­தங்கள் குறித்தும் பல்­வேறு வன்­முறைச் சம்­ப­வங்கள் குறித்தும் கடந்த காலத்தில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பதிவாகியுள்ளன. கடந்த வியாழக்கிழமை அநுராதபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு யுவதிகள் பலியானமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post