Top News

செய்திக்குரிய எண்ணம் (Idea) அல்லது திட்டம் போடுவது

செய்திக்;குரிய எண்ணம் (idea) அல்லது திட்டம் போடுவது என்பது விடயத்தை என்ன கோணத்தில் உங்களுடைய நேயர்கள் விரும்ப்பிக் கேட்பார்கள் அல்லது வாசிப்பார்கள் என்பதாகும். எந்த புதிய திட்டமும் இல்லாமல் உங்களுடைய வானொலி நிகழ்ச்சிகள் கேட்க கூடியதாக இருக்கமாட்டாது. எங்கிருந்த செய்திக்கான திட்டங்கள் வருகின்றன? அவற்றை எப்படி கண்டு பிடித்துக்கொள்வது? நீங்கள் அதிர்ஷசாலிகளாக இருந்தால், செய்திக்குரிய கோணம் உங்களிடம் வந்து சேரும். ஆனால் அதிகமான சந்தர்பங்களில் நாங்கள் செய்திக்குரிய திட்டத்தை தேட வேண்டியிருக்கும். சில வேளைகளில் பார்த்தால் கஸ்ரமாக தெரியலாம் ஆனால் அவ்வாறு இல்லை.
ஒவ்வொரு ஒலிபரப்பாளரும் செய்திக்குரிய திட்டத்தைத் தயாரிப்பதற்கு தனக்குரிய சொந்த பாணியை (நடை) வைத்திருப்பார். தொடர்ச்சியாக ஒரு ஒலிபரப்பு நிலையத்தின் நிகழ்ச்சிகளை கேட்டுவந்தால், நிகழச்சியைத் தயாரிக்கும் திட்டங்களை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இவ்வாறான பயிற்சிகள் உங்களுக்கு அவதானிக்கும் இயல்பை வளர்க்க உதவும். என்ன நீங்கள் செய்த கொண்டிருநந்தாலும், எப்போது செய்துகொண்டிருந்தாலும் ஒவ்வொரு மனிதர்களையும் அவதானியுங்கள், ஒவ்வொரு அனுபவங்களையும், ஒவ்வொரு நிகழ்வுகளிலில் இருந்தும் உங்களுக்கு செய்திக்கான எண்ணம் (ஐனநய) கிடைக்கும்.
உங்களை நீங்கள் கேளுங்கள், ஏன்? குறித்த விடயத்pற்குப் பின்னால் என்ன இருக்கு? என்ன காரணத்திற்காக அவ்வாறு இருக்கின்றன? உங்களுக்குப் பிடித்தமாக எதாவது இருந்தால் உங்களை நீங்கள் கேளுங்கள். உங்களுடைய நேயர்களும் அதை விரும்புவார்களா? எல்லா இடத்திலும் விவரணத்திற்குரிய கரு கிடைக்கும். அவற்றைப் புரிந்து கொள்வதில்லையே தங்கியிருக்கின்றது.
மக்கள் பல்வேறு விதமான விடயங்களுடன் தொடர்புபட்டவர்களாக இருப்பார்கள். உணர்ச்சி பூர்வமான விடயங்கள், தனிமனித முன்னேற்றம், வியாபார மற்றும் தொழில்சார் விடயங்கள், உள்ளுர் மற்றும் சமூக விடயங்கள், வீடு மற்றும் தோட்டம், பணம், உறவுகள், மிருகங்கள், பொழுபோக்கு, நடைமுறை விடயங்கள், புதிய முக்கிய இடங்கள், நிகழ்வுகள், முக்கிய மற்றும் ஆர்வமூட்டக்கூடிய நபர்கள், குடும்ப விடயங்கள், போன்ற எண்ணுக்கணக்கற்றவை. இவற்றில் உள்ள எல்லை என்பது உங்களுடைய கற்பனை செய்யும் ஆற்றலும், எப்படி பொருத்தமான செய்தியாக்குவது என்பதும் ஆகும்.
நூலகம்
நூலகங்கள் என்பது ஒலிபரப்பாளருக்கான செய்திக்குரிய தகவலுக்கான மிகப்பொருத்தமான மூலம் ஆகும்.
உங்களுடைய உள்ளுர் நூலகம் சிறந்த நல்ல செய்திக்குரிய எண்ணக்கருவை கொடுக்கும். உங்களுக்கு தேவையான விடயத்தை எப்படிப் பெற்றுக்கொள்வது என்று அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உதவுவார்கள். பின்வரும் விடயங்களுக்கு தேவையான தகவல்கள் இலகுவில் பெற்றுக்கொள்ளலாம்
1. முக்கிய பிரமுகர்களின் வாழ்க்கை வரலாறுகள்
2. ஊள்ளுர் மற்றும் வெளிநாட்டு வியாபாரம் சம்பந்தமான விடயங்கள்
3. அரச புள்ளி விபரங்கள் மற்றும் ஆய்வறிக்கைகள்
4. அரச மற்றும் இதர வெளியீடுகள்
5. உள்ளுர் மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகைகள், அதில் செய்திக்கான எண்ணக்கரு இலகுவில்
பெற்றுக்கொள்ளலாம்
6. உள்ளுர் நிறுவனங்களின் ஆண்டு மலர்கள் மற்றும் சிறுபிரசுங்கள் என்பவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதேவேளை பல்கலைக்கழக நூலகங்கள் குறித்த விடயம் தொடர்பான பல்வேறு ஆய்வுகள், மற்றும் வெளியீடுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்
சஞ்சிகைகள்
சஞ்சிகைகள் பல்வேறு விதமான சித்தரிப்புக் கட்டுரைகள் கொண்டிருக்கும். அவை வாழ்க்கை, நாகரீகம், கணினி என சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் விருப்புக்களுக்கு ஏற்ற விடயத்தை கொண்டிருக்கும். அவற்றில் இருந்து உங்களுடைய நேயர்களுக்கு தேவையான விடயத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அதனால் பல்வேறு விதமான சஞ்சிகைகளை புரட்டிப் பாருங்கள். நீங்கள் எடுக்கும் கருவிற்கும், நேயர்களுக்கு உள்ள தொடர்பை வெளிப்படுத்தினால் அது அதிகமான நேயர்களை கவரக்கூடியதாக இருக்கும்.
உதாரணமாக நீங்கள் சஞ்சிகையில் வாசிக்கும் ஒரு விடயம் மோட்டார் சைக்கிள் பற்றியதாகவும், அது நாளடைவில் மக்களுக்கு பாதிப்பு கொடுக்கும் என்று வைத்துக்கொண்டால், அந்த விடயம் பற்றி அநேகமான மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களும், சாதாரண மக்களும் கவலைப்படாதவர்களாகவும் இருந்தால் அதை நீங்கள் வானொலியில் எடுத்துச் சொல்வதால் குறித்த விடயம் பெரும்பாலான வாசகர்கள், தங்களுடன் தொடர்புபடுத்தி உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
சில சஞ்சிகைகளில் வரும் சொற்கள் அல்லது விடயங்கள் உங்களுக்குப் புரியாதுவிட்டால், அதனை அப்படியே ஒதுக்கவேண்டாம். சிலவேளைகளில் குறித்த விடயம் ஆர்வமூட்டுவதாக கூட இருக்கலாம். அதில் விளங்காத விடயத்தை எடுத்து, குறித்த விடயத்தில் ஆழ்நத அனுபவமுள்ள ஒருவரிடம் அதற்குரிய விளக்கத்தை கேட்கலாம். அனேகமாவர்கள்; தங்கள் வேலையை பற்றி வெளியில் சொல்லி புகழ் அடைவதை விரும்பவார்கள், இவ்வாறான எண்ணங்கள் ஒரு இலகுவான வழி. சில சஞ்சிகைகள் வழமையாக செய்திக்குரிய கருவை உங்களுக்கு தரலாம். ஆனால் அதனோடு திருப்தி அடைந்துவிடவேண்டாம். புதிய விடயங்களைத் தேடுவதற்கு பாருங்கள்.
நாளாந்த வெளியீடுகள்
கல்விப்புலம்சார்ந்த வெளியீடுகள்.
கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த வெளியீடுகள் வழமையாக சாதாரண மக்களால் விளங்கிக்கொள்ள முடியாத கடினமான சொற்களைப்பயன்படுத்தியே வெளிவருகின்றன. ஆனால் அதனை ஒதுக்கி வைக்க வேண்டாம். சஞ்சிகைகள் வாசிப்பது போன்று இவற்றையும் வாசியுங்கள். உள்ளடக்கத்தை வாசித்து உங்கள் கண்களுக்கு பிடிபடும் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்கள். அதனுடைய சாராம்சத்தை வாசியுங்கள். அது உங்களுக்கு ஆர்வமூட்டுவதாக இருந்தால் தொடர்ந்து வாசியுங்கள். இது சிலவேளைகளில் அதிக நேரம் எடுக்கும். ஆனால் ஆர்வமூட்டக்கூடிய சிலவற்றை இடையில் சந்திக்கலாம், அந்த புதிய கரு உங்களை தொடர்ந்து செய்வதற்கு உறுதுணையாக இருக்கும்.
பத்திரிகைகள்
பழைய பத்திரிகைகள் சிலவற்றை மேலோட்டமாக நீங்கள் வாசித்தால் நிட்சயம் உங்களுக்கு நல்ல ஒரு விவரணத்திற்கான கரு கிடைக்கும். புதிய செய்திகள் விரணத்தை செய்வதற்கு ஆரம்பமாக இருக்க வேண்டிய தேவையில்லை. அதேவேளை ஏற்கனவே பல தடவைகள் விவரணமாக வெளியிடப்பட்ட விடயங்கள், பழைய விடயங்கள் என்பவற்றை மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் பத்திரிகைகளைப் புரட்டவேண்டும்.
வியாபாரம், சுகாதாரம், விஞ்ஞானம், குடும்ப விவகாரம், களிப்பூட்டும் செய்திகள் மற்றும் விளையாட்டுப்பக்கங்கள் விவரணத்திற்கான நல்ல கருவைக்கொடுக்கும். இவற்றைப்பற்றி ஆய்வு செய்வதற்கு பத்திரிகைள் சிறந்த இடமாகும்.
இணையத்தளம்
இணையத்தளம் என்பது முன்னைய காலத்தில் இல்லாத, பெறுமதி அளவிட முடியாத, ஊடகவியலாளருக்கான கருவி. ஊடகவியலாளர்களுக்கு இதுவரை காலமும் இல்லாத வகையில் கைவிரல்களின் நுனியில் பெருமளவான தகவல்கள் கிடைக்கின்றன.
செய்தியின் விடயம் உங்களுக்கு மேலோட்டமாக தெரியமானால் தேடல் இயந்திரத்தில் அதற்கான பிரதான சொல்லைக்கொண்டு தேடுதல் செய்ய, பெருமளவான விடயங்கள் கைகளில் வந்து சேரும். ஒவ்வொரு தேடல் இயந்திரமும் ஒவ்வொரு விதமாக பிரதான சொல்லைக்கொண்டு தேடுவதற்கு வழிவகுக்கும். சாதாரணமாக தேடலை மேற்கொள்ளும் போது தேவைக்கு அதிகமான, பொருத்தமில்லாத பல விடயங்கள் வந்து சேரும். உங்களுக்கு தேவையான செய்திக்கான கருவை அடைவதற்கு முன்பு பல தேவையில்லாத பக்கங்களை புரட்ட வேண்டியிருக்கும். இணையத்தில் கிடைப்பதெல்லாம் எப்போதும் நம்பிக்கைக்கு உரியதல்ல என்பதில் கவனமாக இருங்கள்.
பொதுவாக விவரணத்திற்கான கருவைத் தெரிவு செய்வதற்கு நூலகத்திற்கு செல்வது, சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பவற்றை புரட்டுவது என்பதைக் காட்டிலும் இணையத்தளம் மிகவும் வசதியான ஒன்றாகும். உங்களுடைய தேவையை விட்டுச் வெளியில் செல்லாமமேலே, அனேமாக பத்திரிகைகள் சஞ்சிகைகள் தங்களுடைய இணையத்தளங்களை தேவைக்கு ஏற்றவாறு ஆய்வுகள் செய்வதற்கு அனுமதிக்கின்றன.
இணையத்தள உள்ளடக்கம்
விவரணத்திற்கான கருவை இணையத்தளத்தில் தேடல் இயந்திரத்தால் மட்டுமல்லாது வேறு பல்வேறு வழிகளில் எடுக்கலாம். இணையத்தளத்தில் என்ன என்ன வசதிகள் உள்ளது என்று ஒவ்வொரு ஊடகவியலாளரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கீழே சில உதாரணங்களைக் காணலாம்.
உரையாடல் பகுதி (chatting)
இந்தப்பகுதியில் நீங்கள், ஏனையோருடன் கலந்துரையாடலாம். இதில் எழுத்து மற்றும் ஒலி மூலம் தொடர்பு கொள்ளலாம். எழுத்தில் ஒரு விடயத்தை தட்டச்சு செய்ததும் அது திரையில் தோன்றும். அதன்போது உரையாடல் பகுதியில் சிலர் குறித்த விடயத்தில் ஆர்வம் காட்டி அதனேடு இணைந்து கொள்வார்கள். உங்களுக்கு விவரணம் பற்றிய கரு முதலே இருக்கும் பட்சத்தில் அந்த விடயம் தொடர்பாக உரையாடல் பகுதியில் நீங்கள் நேரடியாகவே இணைந்து கொள்ளலலாம். பொதுவான கலந்துரையாடல் பகுதியில் சென்று பார்க்கும் போது மற்றவர்கள் என்ன விடயம் தொடர்பாக உரையாடுகின்றார்கள் என்பதைப்பொறுத்தும் உங்களுக்குத் தேவையான விடயங்களைப் பெற்றக்கொள்ளலாம்.
தகவல் பலகை மற்றும் குழுக்கள்
இது பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது இடங்களில் காணப்படும் சாதாரண தகவல் பலகை போன்றது. ஆனால் இணையத்தளத்தில். மக்கள் ஏதாவது விடயம் சம்பந்தமாக தங்களுடைய தகவல்களைப் பிரசுரித்து, அதற்கான பதிலுக்கு காத்திருப்பார்கள். அதற்குரிய பதில்கள் கால ஒழுங்கில் ஒன்றன் பின் ஒன்றாக இருக்கும். சிலவேளைகளில் அதில் இருக்கும் விடயங்கள் மற்றும் கருத்துக்களைக் கொண்டு விவரணத்திற்கான கருவை எடுத்துக்கொள்ளலலாம்.
செய்திக்குழுக்கள் மற்றும் கலந்துரையாடல் விடயங்கள்
குழுக்கள் மற்றும் தகவல் பலகைப் போன்று செய்திக்குழுக்களிலும் ஒரு விடயத்தில் ஆர்வமுள்ள பலர் இணைந்திருப்பார்கள். இதனுடைய இலக்கு என்பது குறித்த விடயம் தொடர்பான அறிவையும், தகவல்களையும் பரப்புதல். இது விடயம் சார்ந்து வகைப்படுத்தப்பட்டிருக்கும். உதாரணமாக – மனித உரிமை, கலை இலக்கியம், இசை, தத்துவம். ஒவ்வொரு விடயத்தலைப்புக்களும் அவற்றுக்குரிய கலந்துரையாடப்பட்ட உரையாடல்கள் இருக்கும்.
கட்டுரை விபரக்கொத்து
கட்டுரை விபரக்கொத்து என்பது உடவியலாளர்களுக்கான ஆய்வுக்கு சிறப்பான, விவரணத்திற்கான தயார்படுத்தப்பட்ட மூலம். இணையத்தில் பிரசுரிக்கபட்ட பல்வேறு விதமான கட்டுரைகளின் விரக்கொத்து. அவற்றைப் பார்க்கும் போது உங்கள் வாசகர்களுக்கு தேவையான விவரணத்திற்கான கரு மனதில் உடனடியாக தோன்றும்.
வானொலி தொலைக்காட்சி நிகழச்சிகள்
உங்களுடைய போட்டி வானெலி நிலையத்தினர் என்ன ஒலிபரப்புகின்றனர் என்று அவதானியுங்கள். அவர்களுடைய நிகழ்ச்சிகளை அப்படியே பிரதி செய்வது நல்லது அல்ல, விசேடமாக அவர்கள் வேறு இலக்கு வாசகர்களுக்காக தயார் செய்திருக்கலாம், அதனால் அவை வேறு. ஆனால் அவற்றைக் கேட்பதூடாக உங்களுக்கு புது யோசனைகள் தோன்றலாம்.
உங்களுடைய சொந்த வானொலி நிகழ்ச்சிகளையும் கேளுங்கள். ஏற்கனவே ஒலிபரப்புப்பட்ட செய்திகள் மற்றும் விவரணங்கள் குறிப்பெடுங்கள். உங்களுடைய கையிருப்பில்; தேடிப்பாருங்கள் சிலவேளைகளில் முன்பு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றின் தொடர்ச்சி அல்லது சில மாற்றங்கள் காணக்கூடியதாக இருக்கும். ஏற்கனவே உங்களுடைய வானொலி ஒரு விடயம் சம்பந்தமாக ஒலிபரப்பி இருந்தால் அதனை தொடரலாம்.
மக்கள் தொடர்பு நிறுவனங்கள்.
மக்கள் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் பிரபல்யமான நபர்கள் உங்களின் விவரணத்திற்கு தேவையான நேர்காணல்கள் மற்றும் செய்திகளுக்கு தேவையான பின்னணித் தகவல்களைத் தரலாம். ஆனால் தங்களுடைய செய்தியை வெளியில் சொல்வது அவர்களுடைய பணி. அவர்கள் உங்களை தொலைபேசியில், மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு தகவல்களை செய்திக்குரிய மொழியில் வெளியீடுகள் தருவார்கள்.
உண்மையான செய்திகளைச் சொல்லும் போதும் அது விளம்பரங்கள் ஆகிவிடாதவாறு
நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் இடையில் மிகமெலிதான வேறுபாடே உண்டு. பொதுமக்களுக்கு தேவையான செய்திப் பெறுமதியுடைய விடயங்கள் எதாவது இருக்கின்றதா அல்லது எதாவது பொருளுக்கு அல்லது நிறுவனத்திற்கு இலவசமான விளம்பரமா என்று நீங்கள் தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக குழந்தைப் பொம்மை ஒன்று அழுகின்ற போது உண்மையான கண்ணீர் விடுகின்றது, இதனை விவரணத்தில் சொல்லும் போது அது குறித்த பொம்மைக்கான விளம்பரம். ஆனால் அவ்வாறான 100இற்கும் அதிகமான பொம்மைகள் வறிய குடுபங்களில் உள்ள சிறுவர்களுக்காக கொடுக்கப்பட்டது என்று சொன்னால் அதில் பொது மக்களுக்கு ஆர்வமூட்டும் செய்தி உண்டு.
மக்கள் தொடர்பு நிறுவனங்கள் உங்களுக்கு ஏதாவது செய்திக்கான கரு ஒன்றைத் தருகின்றது என்றால் மிக முக்கியமான விடயம், அவர்கள் ஊடகங்களை தம்வசப்படுத்துவதில் வல்லவர்கள் நீங்கள் அவதானமாக இருங்கள். அவர்களுடைய முழு நோக்கமும் அதுவாக இருந்தால் அவர்களால் பாதிக்ப்படவராகிவிடாதீர்கள்.
நாட்குறிப்பேட்டு நிகழ்வுகள்
எல்லா வானொலி நிலையங்களும், நிகழ்வுகளுக்கான நாட்குறிப்பேடுகள் வைத்திருக்கின்றன. இதில் தெரிந்த, எதிர்காலத்தில் நிகழவுள்ள நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் இருக்கும். இவை அநேகமாக பத்திரிகையாளர் மாநாடு, சபைக்கூட்டங்கள், முக்கிய பிரமுகர்களின் வருகை, ஆண்டு விழாக்கள் மற்றும் அறிமுக விழாக்களாக இருக்கும்.
ஒவ்வொரு தடவையும் எதிர்கால நிகழ்வுகள் பற்றிய விபரங்களோடு நீங்கள் அழைப்பிதழ்களைப் பெறுவீர்கள், அவற்றை உங்கள் நாட்குறிப்பில் பதிவு செய்து கொள்ளுங்கள். எப்போதும் ஏதோ ஒன்று நிகழும், நீங்கள் செய்துகொண்டிருக்கின்ற விவரணத்திற்கு தேவையான தகவல்கள் கூட அதில் கிடைக்கலாம் அதனை நாட்குறிப்பில் குறித்துக்கொள்ளுங்கள்.
இவ்வாறு உங்களுடைய நண்பர்கள் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள் உங்கள் விவரணத்திற்கான கருவைத் தெரிவு செய்வதற்கான களஞ்சியம். ஒவ்வொரு நாளும் நாட்;குறிப்பில் உள்ள விடயம் இருக்கும். இவற்றில் சில செய்தியாக மாறும். சில வேளைகளில் இவற்றில் சில மறந்து போய் அவை கவனிக்கபடாமலே இருக்க சில நல்ல விவரணங்களாக மாறும்.
ஒரு நல்ல விவரணம் தயாரிக்க நீங்கள் உங்களுக்கு பொதியளவு நேரம் கொடுக்க வேண்டும். முன்னதாக உங்கள் நாட்குறிப்பை மேலோட்டமாக பாருங்கள். நடக்கவிருக்கும் நிகழ்வுகள் ஒலி மற்றும் சத்தங்களுடன் ஒன்றுக்கு மேற்பட்ட நேர்காணல்களுடன் விவரணத்தை செய்வதற்குப் பாருங்கள். உங்களால் விவரணத்தின் பின்னணி பற்றி முன்கூட்டியே சிந்திக்க முடிந்தால், உங்களுக்கு தேவையான தகவல்கள் பெற ஆயத்தமாகலாம். சில வேளைகளில் நிகழ்வு மட்டுமே விவரணமாகலாம். ஆனாலும் பின்பு ஒலிபரப்புவதற்கு குறித்த விடயம் நிகழ்வில் அன்று ஒலிப்பதிவு செய்யப்பட வேண்டும்.
தொடர்புகள்
ஒவ்வொரு ஊடகவியாலாளர்களும் தொடர்புகளைப் பேணுவதற்கு புத்தகம் ஒன்று பேண வேண்டும். ஒவ்வொரு தடவையும் நீங்கள் தகவல்கள் அல்லது நேர்காணல் செய்யும் போது அவர்களுடைய விபரங்களைப் பதிந்து கொள் வேண்டும். இன்னொர தடவை அவ்வாறான விடயம் ஒன்றை செய்யும் போது நேர்காணல் செய்வதற்கு ஒருவரைத் தேடுவதிலம் பார்க்க நேரடியாகவே குறித்த நபரைத் தொடர்பு கொள்ளலலாம்.
நீங்கள், உங்களின் சக பணியாளர்களுடன் இதனைப் பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொருவருக்கிடையில் பகிர்ந்து கொள்வது அதிக தொடர்புபை பேணலாம், இது ஊடகவியலாளர்களுக்கு இடையில் பரந்து பட்ட வலையமைப்பை எற்படுத்தும். இது ஒவ்வொருவருக்கும் நன்மை பயக்கும். உங்களுக்கு ஒரு எண்ணம் தோன்றி அது பற்றி விவரணம் செய்வதற்கு யாராவது ஒருவருடன் கதைக்க வேண்டி இருந்தால், உங்களுடைய நண்பர் ஒருவர் ஏற்கனவே அது பற்றி செய்திருந்து அவருடைய தொடர்பு தகவல்கள் உங்களிடம் இருந்தால் நீங்கள் அவருடன் நேரடியாக தொடர்பு கொண்டு சில தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
தொடர்புகள் என்பது புதிய எண்ணங்களுக்கான நல்ல மூலம். ஒய்வாக இருக்கும் நேரங்களில் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். என்ன நடக்கின்றது என்று கேட்கலாம். புதிதாக ஏதாவது இருக்கின்றதா? எதாவது நடக்கின்றதா? இதுவரைக்கும் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தாத விடயம் எதாவது இருக்கா? விவரணத்திற்கான முதலாவது
உங்களுடைய எண்ணக்கருவிற்கான பதிவு
எப்போதும் மனதில் புதிய எண்ணங்கள் உதிப்பதில்லை. சிலவேளைகளில் அவை கவனமாக அறுவடை செய்ய வேண்டியவை. இது முயற்சியும், நேரமும் எடுக்கும். உங்களுக்கு வருகின்ற புதிய எண்ணங்களை சிறிய புத்தகம் ஒன்றில் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். சில சந்தர்பங்களில் அவை முட்டாள்தனமாக அல்லது யதார்த்தபூர்வமற்றதாக கூட இருக்கலாம், ஆனால் ஒரு நாள் அது சாத்தியப்படக்கூடும். புதிய எண்ணங்கள் எப்போதும் நழுவியும், வழுக்கியும் ஒடி விடக்கூடியவை. அவை வந்த வேகத்தில் மறைந்து விடக்கூடியவை. நீங்கள் அதை மறக்ககூடாது என்பதற்காக எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
புதிய கருவிற்காக நீங்கள் உசாராக இருப்பீர்களானால், உங்களுடைய ஆய்வுகள் அதிகரிக்கும் அதனால் உங்களுக்கு எண்ணுகணக்கற்ற விவரணங்களுக்கு புதிய எண்ணங்களுடன் வருவீர்கள். சாத்தியமான சகலவற்றையம் குறித்துக்கொள்ளுஙகள்.
உங்களுடைய குறிப்பு புத்தகத்தை கிறுக்கல் புத்தமாக பாவியுங்கள். உங்கள் மூளையைத் தூண்டும் விடயங்கள் மின்னஞ்சல், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வெளியீடுகள் எங்கிருந்தாவது பெற்றாலும், எடுத்து ஒட்டுங்கள்.
Previous Post Next Post