Top News

வீண்பழிசுமத்துகிறர்களுக்கு மரீனா தஹாவின் பகிரங்க அறிவிப்பு (Proof Attached)


எங்கள் தாருன் நுஸ்ராவில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் துக்ஷ்பிரயோகங்கள் பற்றி;
நீதிமன்றத்தில் 10.08.17 அன்று சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளால் நிரூபிக்கப்பட்ட விடயமானது: எம்மிடம் வேலை செய்த எமது கணக்காளர் மனிஷா சமஹூனும் அவரது கணவர், பவர்ஸில் வேலை செய்யும் ஆஷீரும் தாருன் நுஸ்ராவைத் தங்களுடையதாக்குவதற்காகத் திட்டமிட்டு அதன் காரணமாக எங்கள் மீது குற்றங்களைச் சுமத்தியதாகக் காணப்பட்டு, நீதவான் மனிஷாவை உடனடியாக வேலையிலிருந்து நீங்குமாறு பணித்து உடனடியாக அவர் வேலையை விட்டு நிறுத்தப்பட்டார். அல்லாஹு அக்பர்.
எமக்காக அச்சமயத்தில் உதவிய அனைத்து அங்கத்தவர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் ஜஸக்குமுல்லாஹு ஹைரன்!
நீதிமன்றம் உடனடியாக அக்குழந்தைகள் அனைவரையும் எங்களிடமே ஒப்படைத்து விட்டது. இன்றும் அவர்களெல்லாம் எமது பொறுப்பிவேயே உள்ளனர். எமது அல் அஸாபிர் இண்டர் நஷனல் பள்ளியில் வழமை போல் இலவச கல்வியைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். விடுதியில் அவர்களுக்கு இலவச உணவும் உறைவிடமும் வழங்கப்படுகிறது. அவர்களைப் பராமரிக்க புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது
அச்சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக எந்த ஒரு மருத்துவ ஆதாரமும் இல்லை, CCTV கண்காணிப்புக் காமராக்களில் அறைகளில் அவர்கள் உடைமாற்றுவதாகவோ, உறங்குவதானவோ படங்களும் இல்லை.
விடுதியில் வேலைசெய்து கொண்டிருந்த பொறுப்பாளரின் கணவர் பாலியல் குற்றங்கள் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முலாபர் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
17 வருடங்களாக இந்த விடுதி, அனாதைகளுக்காக மட்டுமன்றி, கைவிடப்பட்ட, ஆதரவற்ற , பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்குமான சேவையை செய்து வருகிறது.
இந்த விடுதியில் க.பொ.த சாதாரணப் பரீட்சையில் 9 A பெற்ற மாணவியோ O/L க்குத் தோற்றிய மாணவிகளோ இல்லை.
நான் ஒரு VOG அல்ல, கண் மருத்துவர். நான் வாழ்க்கையில் என்றுமே கருச்சிதைவு மருத்துவம் செய்ததுமில்லை. செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதுமில்லை.
தீர விசாரிக்காமல் குற்றம் சாட்டுவோர்,அபாண்டமான அவதூறுகளைக் கூறுபவர்கள் இவ்வுலகிலும் மறு உலகிலும் வரவிருக்கும் தண்டனைகளைப் பயந்து கொள்ளட்டும்.
எவரும் இந்தச் சிறார்களைக் காண விரும்பினால் அல்லது உதவி செய்ய விரும்பினால், முன் அனுமதி பெற்று வந்து சந்திக்கலாம்.
டாக்டர் மரீனா தாஹா ரிபாய்
Previous Post Next Post