Top News

எதற்­காக 25 வீத பெண் பிர­தி­நி­தித்­துவம்? விளக்­க­ம­ளிக்­கின்றார் பைஸர் முஸ்­தபா


நாட்டில் 25 வீத பெண் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் வழங்­கப்­பட்­ட­தா­னது  எமது நாட்டில் கிராம,மாவட்ட, மாகாண சபை­களில் சிறந்து செயற்­படும் பெண்­களை முதன்­மைப்­ப­டுத்­த­வே­யாகும்.  அதை விடுத்து ஆட்­சியில் உள்ள தலை­வர்­களின் மனை­வி­மாரை  ஆட்சி கதி­ரையில் அமர வைக்க அல்ல என்று  மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்தார்.  
உள்ளூர் அதி­கார சபைகள் தேர்தல் திருத்தச் சட்­டத்தின் ஊடாக  பெண் பிர­தி­நி­தித்­துவம் 25 வீதம் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளமை குறித்த    நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இந்நிகழ்வில்  கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 
அவர் தொடர்ந்தும் கூறு­கையில், 
2015 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தியின் தேர்தல் வாக்­கு­று­தியை பாரா­ளு­மன்ற தேர்­தலில் நிறை­வேற்­றினார். அதனை  எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லிலும் நிறை­வேற்­றுவார்.  
பல்­க­லைக்­க­ழகங்கள் பல இணைந்து நடத்­திய ஆய்­வு­களின் முடி­வு­களில் மாகாண மற்றும் கிராம மட்­டங்­களில் நிர்­வாக செயற்­பா­டு­களில் பெண்­களின் பங்­க­ளிப்பே அளப்­ப­ரி­ய­தா­க­வுள்­ளது. 
முதல் பெண் பிர­தமர் ஆட்சி செய்த நாட்டில்,  பெண்கள் தைரி­யத்­துடன் முன்­வந்து ஆட்சி கதி­ரையில் அமர இன்று மிகவும் அச்­சத்­துடன் இருக்­கின்­றனர். காரணம் சில விச­மி­களின் பாலியல் தொல்­லைகள் மற்றும் மிரட்­டல்­க­ளாகும்.   இதனை முறி­ய­டிக்­கத்தான் இன்று ஜனா­தி­பதி 25 வீத பெண் பிர­தி­நி­தித்­து­வத்தை கட்­டா­ய­மாக்­கி­யுள்ளார்.
பெண்­க­ளுக்கு அதி­காரம் தேசத்­திற்கு மாற்றம் என்ற கருப்­பொ­ருளில் செயல்­திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் செயற்­படும் நாங்கள் மேலும் குடும்­பத்­திற்கு ஒருவர் என்ற கரு­ப்பொ­ரு­ளிலும் அர­சியல் பங்­க­ளிப்பை மேம்­ப­டுத்த எதிர்­பார்க்­கின்றோம். இது எவ்­வ­கையில் சாத்­தியம் என்று தெரியவில்லை.  
பெண்களே பெண்களுக்கு வாக்க­ளிக்காமல் அவர்களை புறந்தள்ளுவதை நிறுத்தி எதிர்காலத்தில் பெண்களில் அரசியல் அதிகாரத்தை ஸ்தீரப்­படுத்து­வோம் என்றும் அவர் தெரிவித்தார்.  
Previous Post Next Post