Top News

அடையாள அட்டை இன்மை; 3 லட்சம் பேர், வாக்களிக்க முடியாத அபாயம்



எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலின் போது தேசிய அடையாள அட்டை இல்லாதமை காரணமாக மூன்று லட்சம் பேர் வரையிலான நபர்களுக்கு வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ஆள்பதிவு திணைக்களத்தின் ( Registration of persons department ) பணிப்பாளர் வீ. குணதிலக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், 

தங்களது வசிப்பிடத்தை உறுதிபடுத்த தேவையான உத்தியோகப்பூர்வ ஆவணங்கள் இல்லாதமை காரணமாக முன்று லட்சம் பேர் வரை நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித&#3#3021;து தேசிய அடையாள அட்டைகள் இல்லாதோருக்கு அதனை பெற்றுக்கொடுக்கும் திட்டமொன்றை விரைவில் நடைமுறை படுத்த ஆள்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

இதன்படி தேர்தல் பட்டியலில் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நபர்கள் மற்றும் கிராம சேவை அதிகாரிகளின் மூலம் தங்களது வசிப்பிடத்தை உறுதி செய்யக்கூடிய நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் வீ. குணத்திலக்க மேலும் தெரிவித்தார்.

இலங்கை தேர்தல் சட்டங்களின் படி தேர்தல்களின் போது வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டைகளை சமர்ப்பிப்பது அத்தியாவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post