Top News

பசிபிக் கடலில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது



பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் இன்று காலை 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூ கலிடோனியா தீவில் டடைன் பகுதியில் இன்று காலை சுமார் 7.0 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் சில நிமிடங்கள் நீடித்தது. டடைன் பகுதிக்கு 300 கிமீ தொலைவில் சுமார் 82 கிமீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் தொடர்பான சேத விவரங்கள் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை இதே பகுதியில் 6.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post