Top News

சாய்ந்தமருது நகரசபை கிடைக்காது; மக்கள் போராட்டம் தோல்வியில் முடிவு



அஷ்ரப் ஏ சமத்

கல்முனை- சாய்ந்தமருது தனியாகவும் கல்முனை 4 காவும் பிரிப்பதற்கு கேட்கின்றனா். இதனை தற்பொழுது எனக்கு செய்ய முடியாது. இது சம்பந்தமாக அங்குள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் கட்சிகளை கலந்தாலோசித்தே ஒரு ஒருமித்த முடிபுக்கு வரவேண்டும். 
ஏற்கனவே சாய்ந்தமருதுக்கு தனியாக பிரதேச சபையை கெசட் பன்னுவதற்கு நான் தயாரக இருந்தேன். இருந்தும் அங்குள்ள அரசியல் இழு பறிகளால் அது கைகூடவில்லை பிரதம மந்திரி கூட சாய்ந்தமருதுக்கு தனியாக தருவதாக அங்கு கூறியிருந்தாா. தற்பொழுது நுவரேலியா 4 சபைகளும் பொலநருவை மநாரக சபையாக உள்ளடக்கப்பட்டு இம்முறை அங்கு தேர்தல் தனி சபைகளாக நடைபெறும். கல்முனை இம்முறை மாநகர சபையாகவே தேர்தல் நடைபெறும் அடுத்த 4 ஆண்டுகளுக்கு பின்பே மற்றொரு உள்ளுராட்சித் தோ்தல் நடைபெறுமபோதே கல்முனை சாய்ந்தமருது பற்றி ஒரு முடிபுக்கு வரலாம். இன்று உள்ளுராட்சித் தோ்தலை நடாத்துவதற்கு 3331 சபைகளுக்கான வா்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டாா். 


குறிப்பு -
ஜனாதிபதி பிரதமர் கவணத்திற்கு கொண்டுவந்து - சாய்ந்தமருதுக்கு பிரதேச சபையை வா்த்தமானியை இவ் வாரத்திற்குள் கெசட் பன்னுவதற்கு அரசியல் தலைவா் அறிவித்தால் அதனை உடன் பைசா் முஸ்தபாவினால் அமுல் படுத்த முடியும்.
Previous Post Next Post