Top News

உலகக் கல்வி கூடாது என்பதில் பிழையில்லை; நுஸ்ரான் மௌலவிக்கு ஆதரவு!



உலகக் கல்வி கூடாது என்று சொல்லும் நுஸ்ரான் பின்னுாரியின் கருத்து முழுமையாக வரவேற்கப்படவேண்டியதே, காரணம் முஸ்லிம்களுக்கு அல்குர்ஆன், அல்-ஹதீஸ் என பாரிய கல்வியுண்டு இஸ்லாத்தில் இந்த உலகக்கல்வி கற்கவேண்டும் என்று கூறப்படவில்லை என தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது,

மெலும் அந்த அறிக்கையில்,

இஸ்லாம் பரிபூரண மார்க்கம், அதில் எத்தகய சந்தேகமும் இல்லை, நுஸ்ரான் மௌலவியின் கருத்தை எதிர்க்கும் எவருக்கு அல்குர்ஆன் மனனம்? அல்ஹதீஸ் அறிவு? சீதனமற்ற வாழ்வு? வட்டியற்ற வாழ்க்கை? இல்லை எவற்றிவலாவது முடங்கியிருப்பீர் அவர் கருத்தை கருத்தாக பாருங்கள்.

நாம் இலங்கை முஸ்லிம்கள் கருத்துச் சொல்ல அவருக்கு முழு உரிமையுண்டு அதற்காக இஸ்லாமியத் ஐ அவர் எதிர்க்கிறார் என பொய்வாதங்களை கூறவேண்டாம்.

குறிப்பிட்ட விடயத்தில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா நடவடிக்கை யெடுத்து கருத்துக்களை சரியாக கையாள திட்டமிடவேண்டும் எனவும் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
Previous Post Next Post