''எனது கணவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஷ்ரபின் மரணம் தொடர்பாக 17 வருடங்களின் பின்பு ஏன் திடீரென தேடுகிறார்கள்? எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இத்தனை காலம் அமைச்சுப் பதவிகளிலும் அரசாங்கத்தின் உயர் பதவிகளிலும் இருந்த அவர்கள் அப்போது இது தொடர்பாக ஏன் தேடிப்பார்க்கவில்லை?'' என கேள்வியெழுப்பினார் முன்னாள் அமைச்சரும், மர்ஹூம் அஷ்ரபின் துணைவியாருமான பேரியல் அஷ்ரப்.
மர்ஹூம் அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி ஹெலிகொப்டர் விபத்தில் மரணமானதையடுத்து விசாரணை ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது. அவ் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியொன்றினைப் பெற்றுக்கொள்ள முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் முயன்றபோது அது நிராகரிக்கப்பட்டது. பின்பு தகவல் அறியும் ஆணைக்குழுவில் இது தொடர்பில் மேன்முறையீடு செய்தபோது குறித்த அறிக்கை தேசிய சுவடிகள் காப்பகத்திலிருந்து காணாமற் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
“மர்ஹூம் அஷ்ரபின் மரணத்துக்கான காரணத்தையும் அதன் பின்னணியையும் இப்போது தேடுபவர்கள் அவர்கள் பதவிகளில் இருந்தபோது தேடியிருந்தால் இரகசியங்கள் வெளிப்பட்டிருக்கும். ஏன் இப்போது திடீரெனத் தேடுவதற்கான அவசியம் ஏற்பட்டது. அவரின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்கும் எனக்கும் எனது மகனுக்கும் இது கஷ்டமாக இருக்கிறது.
17 வருடங்களின் பின்பு பழைய கதைகளையும் சம்பவங்களையும் கிண்டி எடுக்க வேண்டிய நோக்கம் என்ன? அவர்களுக்குத் தெரிந்த இரகசியங்கள் ஏதும் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.
17 வருடங்களின் பின்பு பழைய கதைகளையும் சம்பவங்களையும் கிண்டி எடுக்க வேண்டிய நோக்கம் என்ன? அவர்களுக்குத் தெரிந்த இரகசியங்கள் ஏதும் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.
அனைத்து விடயங்களும் அப்போதைய ஜனாதிபதியின் காலத்தில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் முன்னால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 வருடங்களின் பின் இதனைத் தேடிப்பார்த்து என்ன செய்யப்போகிறார்கள்? இதன் நோக்கம் என்ன ? என்றார்.
மர்ஹும் அஷ்ரப் பயணித்த ஹெலிகொப்டர் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி அரநாயக்க, குமாரபுர, ஊராகந்த மலைப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியது. விபத்தில் அஷ்ரப் உட்பட 15 பேர் பலியானார்கள்.
மர்ஹும் அஷ்ரப் பயணித்த ஹெலிகொப்டர் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி அரநாயக்க, குமாரபுர, ஊராகந்த மலைப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியது. விபத்தில் அஷ்ரப் உட்பட 15 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து தொடர்பில் விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க நீதிபதி எல்.கே.ஜி.வீரசேகர தலைமையில் ஆணைக்குழு ஒன்றினை நியமித்தார். ஆணைக்குழுவின் அறிக்கை 2017 ஜனவரி மாதம் 1 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய சுவடிக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கிருந்து அறிக்கை காணாமற் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி - விடிவெள்ளி