இனமத,அரசியல் பேதமற்று செயலாற்றியவர் புஷ்பகுமார; மஸ்தான் காதர் புகழாரம்

NEWS


வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வருடங்களாக   மாவட்ட செயலாளராக கடமையாற்றி எமது மக்களின்  சமூக,பொருளாதார கலாச்சார மற்றும் இம்மாவட்ட அபிவிருத்திப் பணிகளில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து அரசியல் சாயம் கலக்காமல் எம்மோடும் எமது மக்களோடும் பெருமனதோடு  பணிகளை செய்த உங்ளை நான் மனமார பாராட்டி  எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ மஸ்தான் காதர் பா.உ தெரிவித்தார்.

வவுனியா மாவட்டச் செயலாளராக கடமையாற்றி மூவின மக்களின் நலனுக்காக பாடுபட்டு தற்பொழுது  இடமாற்றம் பெற்றுச்செல்லும் எம்.பி.ஆர் புஷ்பகுமார அவர்களுக்கான பிரியாவிடை வைபவம் மக்கள் சந்திப்புடன் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ மஸ்தான் காதர் அவர்களுடைய வவுனியா அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற பொழுது அதில் சிறப்புரையாற்றிய கெளரவ  பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது,

இம்மாவட்டத்தில் இருந்து தாங்கள் இடமாற்றம் பெற்றுச் செல்வது எம்மை கவலையடையச் செய்தாலும் அம் மாவட்டம் அபிவிருத்தி அடைய தங்களுடைய பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தங்களை வழி அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்
அத்தோடு
எம் மாவட்டத்திற்கு வந்துள்ள மாவட்ட செயலாளர் சோமரத்தின விதான கமகே அவர்களை வவுனியா மாவட்ட மக்கள் சார்பாக வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்உங்கள் பணி தொடர எம்மால் ஆன ஒத்துழைப்பை நாங்கள்  வழங்குவோம் எனவும் குறிப்பிட்டார்.
6/grid1/Political
To Top