Top News

பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை



அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவரதனவின் தலைமையின் கீழ் குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியும் அமைச்சர் பைஸருக்கு எதிராக எதிர்வரும் 2 நாட்களில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை கொண்டுவரவுள்ளதாக அந்தக் கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இன்று(23) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவது தொடர்பாகவே அதற்கு பொறுப்பான அமைச்சரான பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவுள்ளதாகவும்,எனவே குறித்த யோசனையை முன்வைப்பதற்கு ஏனைய அரசியல் கட்சிகளும் இணைய வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் வேண்டு​​கோள் விடுத்திருந்தார்.
Previous Post Next Post