Top News

எஸ்.எம் சபீசே அக்கரைப்பற்று மேயருக்கு பொருத்தம்; அதாஉல்லாக்கு அழுத்தம்!


முஹம்மட் நபீஸ்

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் நெருங்கியுள்ள காலப்பகுதியில் சிறு கட்சிகள் தொடக்கம் பெரும்பான்ழமை கட்சிகள் வரை தங்கள் வேட்பாளர்கள் மற்றும் வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளனர், அந்த அப்படிடையில் நடைபெறவுள்ள 93 சபைகளிலும் அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியவை அடங்கியுள்ளது. இந்த இரு சபைகளும் தேசிய காங்கிரஸ் கட்சியுடையது என்று சொல்லப்பட்டாலும் இந்த முறை இவையிரண்டையும் வெல்வது என்பது கொஞ்சம் கடினம்தான் ஆனாலும் இவைகள் தேசிய காங்கிரஸ் வெல்லும் என்பதில் கட்சிக்காரர்களுக்கு பாரிய நம்பிக்கையுள்ளது.

இந்த விதிமுறைப்படி யார் அக்கரைப்பற்றின் அடுத்த பொருத்தமான மேயர்? எந்தவட்டாரத்தில் கட்சிக்கு அதிக வாக்குகள் விழும்? எவரை நிறுத்தினால் இன்னும் கட்சியை கொடியேற்றலாம்? என்ற பலகேள்விகள் எழுந்துள்ள நிலையில் அக்கரைப்பற்று எஸ்.எம் சபீசின் பெயர் பெரிதும் அடிபடுகிறது அவர்தான் பன்மைத்தன்மையுடையவர், மேயர் எனும் பதவிக்கு பொருத்தமானவர், கட்சிக்காக உழைப்பவர் என மக்கள் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர், இந்த பேச்சுக்களுக்கு செவிசாய்த்து அக்கரைப்பற்றின் மேயர் என்ற மகுடத்தை வழங்குவார் என மக்கள் பிரதிநிதிகள் குழு அழுத்தமாக தகவல் வெளியிட்டுள்ளது.

கட்சிக்கும், மக்களுக்கு அதிகம் செலவு செய்து தன்னை அர்ப்பணித்து அரசியல் செய்யும் சபீஸ் குறித்து பேசுவதற்கு பலவிருப்பினும் அவர் மக்கள் நேயமிக்கவர் என கட்சிப்போராளிகள் குறிப்பிடுகின்றனர்.
Previous Post Next Post