Top News

பெண்கள் வலுவூட்டலுக்கான வழிமுறைகள் செயலமர்வு!!!



எம்.வை.அமீர் -

இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடாத்திய “பெண்கள் வலுவூட்டலுக்கான வழிமுறைகள்” எனும் தொனிப்பொருளிலான செயலமர்வு 2017.11.20 ஆந் திகதி இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய மற்றும் அறபுக்கற்கைள் பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெண்கள் வலுவூட்டல் தொடர்பிலான கருத்துரைகள் இரு அமர்வுகள் ஊடாக கலந்துகொண்ட பேராசிரியர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள் மற்றும் வளவாளர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த செயலமர்வின் முதலாவது அமர்வில் ஆரம்ப உரையினை MWRAF அமைப்பின் பெண்கள் இணைப்பாளர் யு.ஐ.ஹபீலா ஆற்றினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா “பெண்கள் திறனபிவருத்தியும் வலுவூட்டலும்” எனும் தலைப்பில் கருத்துரை வழங்கியதுடன், பெண்களுக்கான  பொருளாதார வலுவூட்டல் எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் றிஸ்வானுல் ஜன்னா உரை நிகழ்த்தினார்.  மேலும் பெண்கள் வலுவூட்டல் ஊடாக கல்வி மற்றும் ஆரோக்கியம் எனும் தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியை  திருமதி அம்மன்கிளி முருகதாஸ் கருத்துரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வின் இரண்டாம் அமர்வில் பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகளை தடுப்பதுக்கான கொள்கை வகுப்பு தொடர்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் கருத்துரை நிகழ்த்தினார். மேலும் சமூகத்தில் வயது முதிர்ந்த பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் சிவில் சமூகப் பிரதிநிதி டொக்டர் ஏ.எம் ஜெமீல் உரையாற்றினார். நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் நிபுணர்களான சகீனா அலிகான், தினேஷ் ஜயதிலக ஆகியோரால் வடமாகாணத்தில் பெண்களுக்கு ஏற்படுத்தப்பட்ட வாழ்வாதார நிகழ்ச்சித்தட்டங்கள், அதன் முன்னேற்றங்கள் தொடர்பில் கருத்துரைகள் வழங்கிவைகப்பட்டது.

மேற்படி இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் , விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பெண்கள் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்  செயற்பாட்டாரளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். கலந்துகொண்டவர்களினால் பெண்கள் வலுவூட்டல் தொடர்பிலான கருத்துப்பரிமாறல்கள் இடம்பெற்றதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்ப்பட வேண்டிய செயற்பாடுகள் பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 
Previous Post Next Post