Top News

கிந்தோட்டையில் தாக்கபட்ட அப்பாவி முஸ்லிம்களுக்காவது நீதி கிடைக்குமா ?



கிந்தோட்டையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்திய பாதுகாப்பு படை வீரர்களுக்குநல்லாட்சி அரசு விருது வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலங்கையின் பாதுகாப்பு படையானது இவ்வரசின் கைக்கூலிகள் போன்று நடந்துகொள்வதை பல விடயங்கள் மூலம் அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம்சைட்டம் ஆர்ப்பாட்டம் உட்பட பல தங்களுக்குசவாலான விடயங்கள் பொலிசை பயன்படுத்தியே இவ்வரசு முடிவுக்கு கொண்டுவர முயற்சித்தது.

இது போன்ற பல விடயங்களில் இலங்கை பாதுகாப்பு படையானது நாட்டின்நலனை கருத்தில் கொள்ளாது இவ்வரசை பாதுகாப்பதை மையப்படுத்தியேசெயற்பட்டது எனலாம்.

இறுதியில் அவர்களை கண்டிப்பதாக மாறுதல் வழங்குதல் போன்ற ஏதாவதுஒன்றை அவர்களுடன் பேசி செய்துவிட்டு வேறு வகையில் அவர்களைகௌரவித்து மக்களை ஏமாற்றுவார்கள்.

அண்மையில் ஊடகவியலாளரை தாக்கிய கடற்படைத் தளபதிக்குபதவிக்காலத்தை நீடித்து கைமாறு செய்தது இந்த அரசு.ஹம்பாந்தோட்டையில்கன்னத்தில் அறைந்தை பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம் வழங்கி கண்துடைப்புசெய்தது.

கிந்தோட்டையில் பாதுகாப்பு படை வீரர்களே முன்னின்று தாக்குதல்நடாத்தியுள்ளனர்.இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு தவறினால் இதனைநிச்சயமாக இவ்வரசின் திட்டமிட்ட செயற்பாடாகவே நாம் பார்க்கவேண்டும்.

முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்திய பாதுகாப்பு படையினருக்கு தனது பரிசாகஎன்ன விருது வழங்கப் போகிறதோ தெரியவில்லை.கடந்த காலங்களிலைமுஸ்லிம்கள் மீது பெரும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட பொது பல சேனாஅமைப்பை சேர்ந்தவர்களுக்கு சு.கவின் அமைப்பாளர் போன்ற முக்கிய பதவிகள்வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 அஹமட்
ஊடக செயலாளர்
முஸ்லிம் முற்போக்கு முன்னனி 
Previous Post Next Post