கடந்த வருடம் ஜூலை மாதம் வெளிநாட்டில் இருந்து மிகவும் பயங்கரமான சினைப்பர் ரக (gv15/2213) இயந்திர துப்பாக்கி ஒன்று இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
குறித்த துப்பாக்கியை முஸ்லிம் நபர் ஒருவரே இலங்கைக்குள் கொண்டு வந்துள்ளார். இது குறித்த சகல தகவல்களும் எம்மிடம் ஆதாரத்துடன் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதனால் எம்மை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது என்னும் அவர் குறிப்பிட்டார்.
துப்பாக்கியை கொண்டு வந்த நபர் யார்? அவரது அடையாள அட்டை இலக்கம் என்பனவும் எம்மிடம் உள்ளன. பாதுகாப்பை தாண்டி எவ்வாறு இந்த துப்பாக்கி இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டது?
இலங்கையில் நபர் ஒருவருக்கு சாதாரண கைத்துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தவே அனுமதி இல்லாத நிலையில் இவ்வாறான மோசமான துப்பாக்கி எவ்வாறு அனுமதிக்கப்பட்டது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனை பயன்படுத்தி யாரை வேண்டும் என்றாலும் இலக்கு வைக்க முடியும். அரச தலைவர், அரசியல் வாதிகளை, முக்கிய பிரமுகர்களை, வியாபாரிகளை யாரையும் சுட முடியும்.
எம்மை இலக்கு வைக்கக்கூடும் என்ற அச்சம் எமக்கு உள்ளதோடு, எம்மைப்போன்ற நபர்களை கொல்ல வாய்ப்புகள் உள்ளது எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி உடனடியாக இந்த விடயம் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். சாதாரண விடயமாக இவற்றை கருதக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.