இலங்கையில் தற்போதைக்கு தங்கவைக்கப்பட்டுள்ள ரோஹிங்கிய அகதிகள் பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.
பூசா என்பது பயங்கர கொலைகாரர்கள் மற்றும் கொள்ளைக்காரர்கள் உள்ளிட்ட சமூகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலான சமூக விரோதிகளை தடுத்து வைப்பதற்கான இடம் என்பது நம்மில் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.
அதே நேரம் பூசாவில் பெண் காவலர்கள் என்று யாரும் இல்லை. ஆண் பொலிசார் மற்றும் சிறைச்சாலைக் காவலர்கள் மட்டுமே கடமையில் இருக்கின்றனர்.
சிறைச்சாலை விதிகளின் படி சிறைக்கு உள்ளே இருந்து வௌியே அழைத்துச் செல்லப்படும் எவரும் சிறைக்குள் திரும்பி வரும்போது உடம்பு முழுமையாகத் தடவப்பட்டு சந்தேகம் ஏற்பட்டால் அதற்கு மேலும் பரிசோதனைக்குட்படுத்தப்படுவார்கள்.
அந்த வகையில் ரோஹிங்கிய அகதிகளில் உள்ள நம் சகோதரிகளும் மருத்துவ மற்றும் ஏனைய தவிர்க்கவியலாத தேவைகளின் போது வௌியில் சென்று திரும்பி வரும் வேளைகளில் அவ்வாறான சங்கடங்களை எதிர்கொள்கின்றனர்.
மேலும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக அப்பாவி சிறு குழந்தைகளின் கல்வி பாழாக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஒரு அழுத்தம் கொடு்பபதன் அவசியம் உணரப்பட்டுள்ளதுடன் அந்த முயற்சியில் எம்மோடு தோள் சேர்ந்து போராட பெரும்பான்மை சமூகத்தின் புத்தஜீவிகள் பலரும் தயாராக இருக்கின்றார்கள்.
எனவே இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 08ம் திகதி புதன்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.
விரும்பியவர்கள் கலந்து கொள்ளுங்கள். ரோஹிங்கிய அகதிகள் மீதான உங்கள் கரிசனையை வௌிப்படுத்துங்கள்