உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்பார்த்து தீவிர ஆயத்தங்களில் ஈடுபட்டு வரும் மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன பெருமளவில் பௌத்த துறவிகளை களமிறக்குவதற்க திட்டமிட்டுள்ளது.
தனது ஆட்சிக்காலத்தில் தன்னையொரு பௌத்த காவலனாகக் காட்டிக் கொள்வதற்காக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிட்ட மஹிந்த சிறுபான்மை மக்களின் ஆதரவையும் பதவியையும் இழந்திருந்தார். இந்நிலையில் அரசியல் ரீதியாக தொடர்ந்தும் இனவாதத்தை நம்பியிருக்கும் அவரது கட்சி பெருமளவில் பௌத்த துறவிகளைக் களமிறக்குவதன் மூலம் சிங்கள மக்களின் வாக்குகளைக் கவரத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற எல்லைகள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு டிசம்பர் 4ம் திகதி வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் அறிவிப்பும் பின் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.