கல்முனை மாநகர சபையை நான்கு சபைகளாகப் பிரித்து சாய்ந்தமருதிற்கு தனியான சபை வழங்குங்கள் என்றும், சாய்ந்தமருதை மாத்திரம் கல்முனை மாநகர சபையிலிருந்து பிரித்து தனியான உள்ளூராட்சி சபை வழங்கக் கூடாதென்றும் வலியுறுத்தி நேற்று கல்முனையில் அமைதிப் பேரணியொன்று இடம்பெற்றது.
இந்த இப்பேரணியில் பெருமளவில் பொது மக்கள், உலமாக்கள், வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கினர். அத்துடன், கல்முனை பிரதேச செயலகத்தின் செயலாளர் எச்.எம்.முஹம்மட கனியிடம் கல்முனைகுடி பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் டாக்டர் அஸீஸ் மகஜர் ஒன்றினையும் கையளித்தார்.
இதனிடையே, கல்முனை பிரதேசத்தில் இன்றும் நாளையும் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் போராட்டத்துக்காக கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது .
கல்முனை முஸ்லிம்களின் தலைநகர்
1987ஆம் ஆண்டிற்கு முன்னர் கல்முனையில் நான்கு சபைகள் காணப்பட்டன. கல்முனை நகரத்தை மையமாகக் கொண்ட சபை கல்முனை பட்டின சபை என்று அழைக்கப்பட்டது. இவ்வாறு இருந்த சபைகளை எங்களிடம் கேட்காமலேயே இரவோடு இரவாக கல்முனை பிரதேச சபையாக மாற்றியமைத்தார்கள். இது கல்முனை முஸ்லிம்களுக்கு செய்த மிகப் பெரிய அநியாயமாகும். நாங்கள் சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபை வழங்குவதற்கு எதிர்ப்புக் காட்டவில்லை. அவர்களுக்கு தனியான உள்ளூராட்சி சபையை வழங்குங்கள் என்றுதான் கூறுகின்றோம். கல்முனை முஸ்லிம்களின் தலைநகரமாகும். இதனை இழப்பதற்கு நாங்கள் தயாரில்லை. இவ்வாறு நேற்று அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவரும், கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவருமான டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கல்முனை மாநகரத்தை 1987ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்தது போன்று நான்கு சபையாக மாற்றுங்கள் என்றுதான் கேட்கின்றோம். முன்பு எங்களிடம் எதுவும் கேட்காது செய்ததைப் போன்று இதனையும் செய்யுங்கள் என்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றோம்.
1987 ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த நான்கு சபைகளையும் ஒன்றாக்கி ஒரு சபையாக மாற்றி அமைத்தமையால் நாங்கள் கடந்த 30 வருடங்களாக பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

கல்முனை, முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதொரு நகரமாகும். இதனை முஸ்லிம்களின் தலைநகரமாக்கி அழகு பார்க்க வேண்டும். இதற்கு நாங்கள் பிரிந்து நிற்க முடியாது. சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபை வழங்குவதாக இருந்தால் கல்முனையை நான்காகப் பிரிக்க வேண்டுமென்று நாங்கள் சொல்லுவதன் உண்மைத் தன்மையை புரிந்துகொள்ளாத சாய்ந்தமருதைச் சேர்ந்த எமது சகோதர்களில் ஒரு குழுவினர் என்ன நடந்தாலும் கவலையில்லை சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபை தாருங்கள் என்று போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆயினும், கல்முனையை நான்காகப் பிரித்து சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளூராட்சி சபையை வழங்குங்கள் என்பதுதான் எங்களின் நிலைப்பாடாகும்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் எச்.எம்.நிஜாம் உரையாற்றுகையில்,
நாங்கள் இன்று மேற்கொண்ட அமைதியான பேரணி எந்தப் பிரதேசத்திற்கும் எதிரானதல்ல. ஆனால், கல்முனையை நான்காக பிரித்து நான்கு உள்ளூராட்சி சபைகளை உருவாக்குங்கள் என்றுதான் கேட்கின்றோம். இது எங்கள் மக்களின் கோரிக்கையாகும். இதற்கு மாற்றமாக கல்முனையின் இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கும் வகையில் உள்ளூராட்சி சபைகளை உருவாக்குவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்தார்.