எரிபொருள் நெரு க்கடியால் பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, சபைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக சபாநாயகர் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
சபாநாயகரின் அறிவிப்புக்களையடுத்து ஒழுங்குப்பிரச்சினையொன்றை அவர் முன்வைத்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்:
பெற்றோல் தட்டுப்பாட்டினால் எம்.பிகளுக்கு இன்று பாராளுமன்றத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தூர இடங்களில் இருந்து வரும் எம்.பிகள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர். வரலாற்றில் முதன்முறையாக எரிபொருள் பிரச்சினையால் எம்.பிகளுக்கு பாராளுமன்றத்திற்கு வர முடியாத நிலை உருவாகியுள்ளது.இது தொடர்பில் கவனம் செலுத்தி எம்,பிகளுக்கு பாராளுமன்றத்திற்கு வருவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்றார்.
ஷம்ஸ் பாஹிம்,மகேஸ்வரன் பிரசாத்