Top News

முன்னாள் அமைச்சர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கு புரியாத வட்டமடு!



அக்கரைப்பற்றை அண்டிய பிரதேசங்ளையும், அக்கரைப்பற்றை சேர்ந்த விவசாயிகளின் பூர்வீக காணியாகிய வட்டமடு, முராணை வெட்டி, போன்ற விவசாய காணிகளின் காணிப்பிரச்சினைகளை கடந்த அரசாங்கத்தின் முதுகெலும்பாக இருந்த தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா தீர்த்திருக்க முடியும் காரணம் மஹிந்த ரெஜிமண்டு அந்த அளவு அதிகாரத்தை வைத்திருந்தது, அந்த கடிவாளத்தின் மூலம் தீர்த்திருக்க முடியும் ஆனால் செய்திருக்கப்படவில்லை, இந்த விவசாயிகள் கிட்டத்தட்ட 2500 ஏக்கர் காணிகளை வன இலாகாவிற்கு பறிகொடுத்து பரிதவிக்கின்றனர். 

கடந்த ஐந்து தினங்களாக அக்கரைப்பற்றில் வீதிக்கிறங்கி போராட்டம் நடத்தும் விவசாயிகள் குறித்து எவரும் கவனம் எடுக்கவில்லை, இதுவரை எந்தவொரு அரசியல்வாதியும் கணக்கில் எடுக்கவில்லை, முஸ்லிம்களின் கட்சிகள் என்று சொல்லப்படும் முஸ்லிம் காங்கிரஸ். அ.இ.மக்கள் காங்கிரஸ் கட்சிகள் கூட கண்டுகொள்ளவில்லை, இவர்களுக்கு தான் புரியவில்லை என்றால் வட்டமடு விவசாய அமைப்பகளோடு நெருங்கிப்பழகும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்திற்குமா புரியவில்லை? அல்லது தவத்தின் கோரிக்கையை தலைமை ஏற்கவில்லையா? அல்லது நல்லாட்சிதான் புறக்கணிக்கிறதா? இப்படி பல கேள்விகள் நம்மில் எழுந்துகொண்டிருக்கையில் விவசாயிகள் போராட்டம் நடாத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

பொது மக்களாகிய நாமாவது அவர்களோடு இணைந்து வீதிக்கிறங்கி ஆதரவு தெரிவிப்போம், முஸ்லிம்களின் பூர்வீக காணிகளை காப்போம்.
Previous Post Next Post