Top News

பிரதமர் வெளியிட்ட கருத்து குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை



கடந்த அரசாங்கம் இரகசிய கடன் பெற்றுக்கொண்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து குறித்து விசாரணை நடத்துமாறு கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கடிதமொன்றை ஒப்படைத்து கூட்டு எதிர்க்கட்சியினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

பிரதமர் ரணிலின் இந்தக் கருத்தானது கடன் வழங்கும் சர்வதேச நிறுவனங்களையும், நாடாளுமன்றையும் பிழையாக வழிநடத்தும் முயற்சியாக கருதப்பட வேண்டும்.

எனவே இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அரச நிதி தொடர்பான முழு பொறுப்பும் நாடாளுமன்றைச் சாரும்.
எந்வொரு அரசாங்கமும் பெற்றுக் கொள்ளும் கடன் பற்றிய முழு விபரங்களும் நாடாளுமன்றிற்கு தெரிந்திருக்க வேண்டும்.

கடந்த அரசாங்கம் இரகசிய கடன் பெற்றுக் கொண்டமை குறித்து மத்திய வங்கி ஆண்டறிக்கையிலோ அல்லது நிதி அமைச்சின் வருடாந்த அறிக்கைகளிலோ குறிப்பிடப்படவில்லை.

பிரதமர் வெளியிட்டுள்ள இந்த பொய்யான கருத்தினால் தேசிய பொருளாதாரத்திற்கு பாதக நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post