அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
சவுதி அரேபிய மன்னர் சல்மான் விரைவில் பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை சவுதி அரசு வட்டாரங்கள் மறுத்துள்ளன.
சவுதியில் மன்னர் சல்மான் (81) தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அவரது மகன் முகமது (32) பட்டத்து இளவரசராக உள்ளார். மன்னருக்கு எதிராக செயல்பட்ட அரச குடும்பத்து இளவரசர்கள் 11 பேர் அண்மையில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். அரசுக்கு எதிராக கருத்துகளைக் கூறிவந்த இளவரசர் மிக்ரின் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.
இந்நிலையில் வயது முதுமை காரணமாக மன்னர் சல்மான் விரைவில் பதவி விலகுவார் என்றும் பட்டத்து இளவரசர் முகமது மன்னர் பொறுப்பை ஏற்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை மறுத்துள்ள அரசு வட்டாரம், மன்னர் மரணம் அடையும் வரை பதவியில் நீடிப்பார் என்று கூறியுள்ளது.