அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம், பாடசாலைச் சமூகம் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட இந்தக்கலந்துரையாடலில் பாடசாலை நேரங்களில் அதற்கு அண்மைய வீதிகளில் மோட்டார் வாகனங்களில் பயணிக்கும் சாரதிகளாலும், மோட்டார் சைக்கிள் செலுத்தும் இளைஞர்களாலும் ஏற்படும் தொந்தரவுகள் சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேற்படி கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக எடுக்கப்பட்டதோடு இத்தீர்மானங்களை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
1. பாடசாலையைச் சுற்றியுள்ள வீதிகளில் (ஆயிஷா பாலிகா, அல் முனவ்வறா, ஆண்கள் வித்தியாலயம்) சிவில் உடையுடன் போக்குவரத்துப் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.
2. தவறான முறையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள், மாணவிகளை கேலி செய்யும் இளைஞர்களின் வாகன இலக்கங்களை பதிவுசெய்து, அல்லது அவற்றினை வீடியோ செய்து அந்த ஆதாரங்கள் முலமாக அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
3. குறித்த விடயத்தின் பின்னர் மோட்டார் வாகன சாரதி உண்மையில் குற்றவாளியாக கருதப்பட்டால் அவர் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
4. பாடசாலை ஆரம்பிக்கும் நேரங்களிலும் பாடசாலை முடிவடையும் நேரங்களிலுமன்றி முழுமையாக பாதுகாப்பு படையினர் சிவில் உடையில் பாடசாலையைச் சுற்றி கடமையில் ஈடுபடுவார்கள்.
மேற்குறித்த தீர்மானங்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு முடிவுசெய்யப்பட்டது.
எனவே எமது பாடசாலையைச் சுற்றியுள்ள பாதைகளில் பயணிக்கும் அனைவரும் சட்டத்தை மதிக்கும் வண்ணம் வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுகிறார்கள்.