ஏமன்: சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 23 அப்பாவி பொதுமக்கள் பலி

NEWS

சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.



இந்நிலையில், ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுத்தி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 23 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.

மத்திய கிழக்கு நாடுகளான ஏமன், சிரியா, ஈராக் மற்றும் லெபனானில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரான் மற்றும் சவுதி அரேபியா நாடுகள் முயற்சித்து வருகின்றன. அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் இதுவரை பத்தாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

6/grid1/Political
To Top