2018 பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள 341 உள்ளாட்சி மன்றத் தேர்தலில், 8 ஆயிரத்து, 358 உறுப்பினர்கள் பதவிக்காக 25 அரசியல் கட்சிகளும், 124 சுயாதீன குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
இதற்கமைய, அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் 52 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
குறித்த உள்ளாராட்சி மன்றங்களின் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இரண்டு கட்டமாக இடம்பெற்று நேற்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்தது.
இதற்கமைய, குறித்த இரண்டு கட்ட வேட்புமனுத்தாக்கல்களின்போதும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் 11 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முதற்கட்டமாக தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களில் இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இலங்கை தமிழரசுக் கட்சி ஆலையடிவேம்பு மற்றும் அப்பாறை முதலான பிரதேச சபைகளுக்கு தாக்கல் செய்திருந்த இரண்டு வேட்புமனுக்கள் முதற்கட்ட வேட்புமனுத்தாக்கலின்போது நிராகரிக்கப்பட்டன.
இதேவேளை, இரண்டு உள்ளாட்சி மன்றங்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று தாக்கல் செய்திருந்த இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு அரசியல் கட்சிகளினதும் ஒரு சுயேச்சை குழுவினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாநகரசபை, நெடுந்தீவு, வலிகாமம்; வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேச சபைகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அதன் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் காலத்தின்போது இடம்பெறும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் இன்று முற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.