Top News

துருக்கியில் 2756 அரச ஊழியர்கள் பணி நீக்கம்


துருக்கி அரசாங்கம் அந்நாட்டிலுள்ள 2756 அரச ஊழியர்களை சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சதி முயற்சியில் பங்குதாரர்களாக செயற்பட்டவர்களே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 137 பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், இராணுவ வீரர்கள் 637 பேரும் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கு முன்னரும் சதிப்புரட்சி குற்றம்சாட்டப்பட்ட அரச ஊழியர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்ததாகவும் அச்செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன. 
Previous Post Next Post