எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் சுமார் 50 வரையான முஸ்லிம்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களிலும் 50 க்கும் குறையாத முஸ்லிம் வேட்பாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் களமிறங்கவுள்ளனர் என்று தெரியவருகின்றது.
வடக்கு மாகாணத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 32 வட்டாரங்கள் உள்ளன. அந்த வட்டாரங்களில் முஸ்லிம் வேட்பாளர்களையே நிறுத்துவது என கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
யாழ். மாநகரசபை, வவுனியா நகரசபை, முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உள்ளிட்ட பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களில் இரட்டை அங்கத்தவர் தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.