Top News

6 முஸ்லிம் நாடுகளுக்கான பயணத்தடைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி


முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஆறு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய ஜனாதிபதி டிரம்ப் விதித்திருந்த பயணத்தடை முழுமையாக அமல்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
என்றாலும் சாட், இரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் நாட்டு பயணிகளுக்கு எதிராக பெறப்பட்ட உத்தவுகள் இன்னும் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளது.
நேற்றைய தினம் (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்துவரும் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழுவில் ஏழு நீதிபதிகள் இந்த பயணத்தடை மீது நீதிமன்றங்கள் பிறப்பித்திருந்த உத்தரவுகளை விலக்க ஒப்புக்கொண்டனர்.
நீதிபதிகள் ரூத் படேர் கின்ஸ்பர்க் மற்றும் சோனியா சோட்டோமேயர் ஆகியோர் மட்டுமே ஜனாதிபதியின் பயணத்தடை மீதான தடை தொடர வேண்டும் என்பதற்கு ஆதரவாக இருந்தனர்.
தேசிய குடிவரவு சட்ட நிலையத்தின் சட்ட இயக்குநரான கேரன் டம்லின், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ‘பேரழிவான செய்தி’ என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post