சிரியாவில் ரஷியா நாட்டு விமானப் படைகள் நடத்திய தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 19 பொதுமக்கள் உள்பட 66 பேர் கொல்லப்பட்டனர்.
சிரியா நாட்டின் இப்லிப் மாகாணத்த்தில் தீவிரவாதிகளை குறிவைத்து அந்நாட்டின் அரசுப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக ரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்துகின்றது.
இந்நிலையில், ஹாமா மற்றும் இப்லிப் மாகாணத்தின் தென்மேற்கு பகுதிகளில் ரஷிய விமானப்படைகள் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் 19 பொதுமக்கள் உள்பட 66 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவில் இயங்கிவரும் பிரட்டனை சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் நடந்துவரும் போரினால் இதுவரை சுமார் 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல லட்சம் மக்கள் உயிருக்கு பயந்து நாட்டைவிட்டு தப்பியோடி உள்ளனர்.