எதிர்வரும் காலங்களில் சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களை பல மாற்றங்களுடன் 6 பாடங்களாகக் குறைத்து, தகவல் தொழில்நுட்பத்தினை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
உலகின் வெற்றிகரமான கல்வி முறை ஃபின்லாந்து நாட்டில் காணப்படுவதாகவும், நடைமுறை மற்றும் தொழிற்துறை கல்வியே அங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர், குறித்த முறைக்கு முன்னுரிமை கொடுத்து மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ள கல்வித்திட்டம் மூலம் நாட்டின் மாணவர்களது எதிர்காலத்தைச் சிறந்த முறையில் வலுப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.