பெப்ரவரி 7ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடை

NEWS

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதிக்கு பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதேவேளை உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைப்பெறவுள்ளதாகவும், இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம் எம் மொஹமட் இதன்போது தெரிவித்தார்.
மேலும், கடந்த 9ஆம் திகதியில் இருந்து இன்று வரையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களுடன் தொடர்புடைய 31 விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
6/grid1/Political
To Top