ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலை நகராக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பையும் அமெரிக்க அரசையும் கண்டித்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஆர்பாட்டம் நேற்று (12.12.2017) கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றது.
பலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராகவும் நடைபெற்ற இந்நிகழ்வில், அமெரிக்க தூதரகத்தை நோக்கி செல்ல முற்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தினரை பொலிசார் தூதரகத்தை நோக்கி செல்ல விடாமல் இடை மரித்தார்கள்.
காலி முகத்திடல் சுற்று வட்டத்திற்கு முன்னால் ஆர்பாட்டம நடைபெற்ற நேரத்தில் அமைப்பின் செயலாளர் சகோ. ஹிஷாம் MISc மற்றும் நிர்வாகிகளை பொலிசார் தமது வாகனத்தில் அமெரிக்க தூதரகத்திற்கு அழைத்து சென்றார்கள். அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் இலங்கை முஸ்லிம்களின் கண்டனத்தை பதிவு செய்யும் விதமான மகஜரை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஒப்படைத்தார்கள்.
பின்னர் நடைபெற்ற கண்டன உரையில் தமிழ் மொழியில் அமைப்பின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்களும் அமைப்பின் பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் சிங்கள மொழியிலும் உரையாற்றினார்கள்.
ஜெரூஸலத்தை அபகரித்து இஸ்ரேலுக்கு கொடுக்கும் அமெரிக்காவின் கபடத் தனம் கொண்ட திட்டத்தை அமெரிக்கா கைவிட வேண்டும் என்றும் அரபு நாடுகளும் சர்வதேச நாடுகளும் அமெரிக்காவின் செயல்பாடுகளுக்கு எதிராக திரல வேண்டும் என்றும் கண்டன உரையில் வலியுறுத்தப்பட்டதுடன், அரபு நாடுகள் அமெரிக்காவுடனான ராஜதந்திர உறவுகளை முற்றாக துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
-ஊடகப் பிரிவு,
தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ