இலங்கை மின்சார சபை பணியாளர்கள் சிவப்பு எச்சரிக்கை!

NEWS


புகையிரத சேவையாளர்கள் இன்று ஐந்தாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும் நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக இலங்கை மின்சார சபை பணியாளர்கள் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மின்சார சபைக்குள் நடைமுறைப்படுத்தப்படும் சட்டவிரோத ஈ - சேர்க்கல் சம்பள முறைமைக்கு இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டால், இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த பணியார்களின் ஒன்றியம் எச்சரித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் குறிப்பிட்ட சில பணியாளர்களுக்கு 60% இற்கு 120% வரை சம்பளத்தை உயர்த்த 2014 இல் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக, மின்சார சபைக்கு தற்போது வரை 225 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
6/grid1/Political
To Top