மேல் மாகாணத்தின் மாநகர பிரதேசங்களில் கட்டாகாலி மாடுகளை டிசம்பர் 15ஆம் திகதிக்குள் அப்புறப்படுத்தவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
நகர ஒழுங்கு படுத்தல் திட்டத்தின் கீழ் கட்டாகாலி மாடுகளை பிடித்து அவற்றை எம்பிப்பிட்டியவில் உள்ள மாடுகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப் போவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மாநகர கட்டளைச் சட்டத்திற்கு அமைய மாடுகளை உரிய முறையில் அடைத்து வைக்க அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மாடுகள் வெளியில் சுற்றித்திரிவது , வீதிகளில் இருப்பது மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையூறை ஏற்படுத்துவதுடன் போக்குவரத்து நெரிசலுக்கும் காரணமாகின்றது.
மாடுகளின் உரிமையாளர்கள் அவற்றை பராமரிக்க முடியாவிட்டால் அவற்றை தமது அமைச்சிடம் ஒப்படைக்குமாறும் உரிமையாளர் தெரிந்தே மயானங்கள் மற்றும் விளையாட்டு பூங்காக்களில் மாடுகள் அவிழ்த்து விடுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.