நைரோபியில் இருந்து இஸ்தான்புல் நகருக்கு துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்தது. அதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது பயணிகள் அனைவரும் விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது என கூச்சலிட்டு அலறினார். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து உரிய அனுமதியுடன் சுவீடனில் உள்ள கார்டோம் விமான நிலையத்தில் விமானம் தரை இறக்கப்பட்டது. அதன் பின்னர் விமானத்தில் இருந்த பயணிகளிடமும், விமானத்திலும் சோதனையிடப்பட்டது.
அதையடுத்து ஒவ்வொரு பயணியின் செல்போனை வாங்கி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒரு பயணியின் வை-பை சிக்னலின் பெயர் “விமானத்தில் வெடி குண்டு இருக்கிறது” என ஆங்கிலத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதால் மீண்டும் விமானம் இஸ்தான்புல் புறப்பட்டு சென்றது. ஆனால் யாருடைய செல்போனில் இதுபோன்ற ஆங்கில வாசகம் இருந்தது என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அந்த நபரை மன்னித்து விட்டதாக தெரிகிறது.