தங்களை தனிப்பட்டதேவைகளுக்காக பயன்படுத்திய நபர்களின் முகங்களை அறிந்துகொண்டமையினால் துர்நாற்றத்திற்குள்ளும் நுளம்புக்கடிகளுக்கு மத்தியிலும் பல நாட்கள் போராட்டம் நடாத்திய வட்டமடு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பந்தலை பிரித்துக்கொண்டு வீடுதிரும்பினர்.
1977ம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து காணப்படும் வட்டமடுப்பிரச்சினை தொடர்பாக ஒருசிலரின் கட்டுரைகளை அங்கங்கே காணக்கிடைத்தது அது எவ்வாறென்றால் அவர்களுக்கு நாங்களும் கட்டுரை எழுதி அறிவாளி என்று காட்டவேண்டிய தேவையில் வட்டமடு தொடர்பாக உண்மைத்தகவல்கள் தெரிந்தவர்கள் எங்களுக்கு அறியத்தாருங்கள் எனக்கேட்டுக்கொண்டார்கள், கிடைத்த தகவலை வைத்துக்கொண்டு அவசரகாலச்சட்டத்தில் ஆமிக்காறன் கண்ணில் படும் புலிப்படைகளை கேள்விபாறின்றி சுட்டுத்தழ்வது போன்று கட்டுரைகளை சுட்டிறக்கினர் அதனை பார்த்துவிட்டு புன்னகைப்பதைத்தவிர வேறு எதுவும் செய்யமுடியாது.
ஆனால் வட்டமடு விவசாயிகள் பிச்சைக்காரன்புண்போல எங்களை அவர்களின் தேவைக்கு பயன்படுத்திவிட்டார்கள் எனக்கூறி,
பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கவிருந்த தறுவாயில் பண்ணை வளர்ப்பாளர்கள் சங்கத்தின் தலைவன் முருகனின் வீட்டுக்கு சென்று நீ அதாஉல்லா சொல்வதுபோன்று நடந்துகொண்டால் உனக்கு அழிவுதான் கிடைக்கும் மேய்ச்சல் தரை உனக்கு கிடைக்காது அவனை நம்பாதே என்று கச்சேரிக்கு முருகனை செல்லவிடாமல் குறிப்பிட்ட அரசியல்வாதி தடுத்ததனை விவசாயிகளான நாங்கள் கேள்வியுற்ற நேரம் எமது ஈரக்கொலை அறுந்துவிட்டதாக கண்கலங்கினர்.
குறிப்பிட்ட போகம் மாத்திரம் வேளாண்மை செய்வதற்கு அனுமதிதாருங்கள் என கையொப்பம் சேர்க்கப்பட்ட வேளையில் அவ்வாறு செய்யவேண்டாம் ஒருபோகத்துக்கு மாத்திரம் வேளாண்மை செய்யக்கேட்டால் நீங்களே அது உங்கள் காணிகள் இல்லை என்பதனை ஒத்துக்கொண்டு விடுவீர்கள் அந்த பிழையை செய்யவேண்டாம் என தலைவர் செய்தி அனுப்பியதும் தனக்கு விசுவாசமான இருபேரினது கையொப்பத்தையிட்டு அரசாங்க அதிபருக்கு கொடுத்துள்ளனர் அதன் திருகுதாளத்தை அறிந்த விவசாயிகள் இவ்வாறு கூறினார் குறிப்பிட்ட நபருக்கு 10 ஏக்கர் வேள்ளாண்மை செய்துகேட்டு விவசாயிகள் பணம்போட்டு செய்துகொடுத்திருந்தோம் யார் வாழ்ந்தாலும் பறவாயில்லை பூனை கண்பொண்டாட்டியானால் நமக்குகென்ன என்ற பார்வையில் அவருக்கு செய்துகொடுக்கப்பட்ட வேளாண்மையை வெட்டி எடுப்பதிலையே குறியாக இருந்தார் என விவசாயிகள் தெரிவித்தனர்.
அந்தகாலத்தில் ஒருசில அரசியல்வாதிகள் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக தலைநகர் செல்லவேண்டியிருந்தால் அமைசரை சந்திக்கவேண்டும் உங்களது தொழில் தொடர்பாக என்று கூறி பயனாளியிடமிருந்து உதவி பெறுவதுபோன்ற சம்பவங்கள் எங்களை மிகவும் வேதனைப்படுத்திவிட்டது என விவசாயிகள் கூறினார்.
எங்களை ஏமாற்றி நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள். எங்கள் தவறுகளை உணர்ந்து உங்களை நாடிவந்துள்ளோம் எங்களுக்கு உதவி செய்யுங்கள் என விவசாயிகள் அதாஉல்லா அவர்களை வேண்டிக்கொண்டனர்.
தலைவர் அவர்கள் வட்டமடு விவசாயக்காணிகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட தீர்வு பற்றிய விடயங்களை தெரியப்படுத்தியதோடு நீங்கள் தவறுகளை உணர்ந்துகொள்ளாவிட்டாலும் உங்களுக்கான தீர்வினை பெற்றுத்தருவதற்கு முயற்சித்துக்கொண்டுதான் இருப்பேன் அதற்கு இறைவன் துணைபுரிவான் என கூறினார்.
விவசாயிகள் தமது கூடாரங்களை அக்கற்றிக்கொண்டு வீடுதிரும்பினர்.