Top News

சமய புனித தலங்களில் எந்தவித தேர்தல் பிரச்சாரமும் செய்யக் கூடாது.




ஏ.ஆர்.ஏ.பரில்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது எந்தவொரு சமயத்தின் கொடியையும் பிரசாரத்துக்காக பயன்படுத்தக்கூடாது.

சமய புனித தலங்களில் அல்லது அரச உத்தியோகபூர்வ விடுதிகளில் பிரசார அலுவலகங்களை அமைக்க அனுமதி வழங் கப்படமாட்டாது என தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப் பிரிய தேர்தலில் போட்டி யிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கக்களிடம்
வேண்டுகோள் விடுத்தார்.

 தேர்தல்கள் ஆணையாளர் திணைக் களத்தின் கேட்போர் கூடத்தில் நடை பெற்ற அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் தலைவர்களை தேர்தல் தொடர்பில் தெளிவுபடுத்தும் கலந்துரை யாடலில் கலந்துகொண்டு உரையாற்று கையிலேயே தேர்தல்கள் ஆணையாளர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் தெளிவுபடுத்துகையில்,

 எந்தவோர் கட்சி அலுவலகமும் அரச பாடசாலைகள், வைத்தியசா லைகள், நீதிமன்றங்கள், உள்ளூர் அதிகார சபைகள், அஞ்சல் அலுவலகங்கள், அரச பாடசாலைகளுக்கு அருகில் நிறுவப்ப டக்கூடாது.

அரச நிறுவனங்கள், பாடசா லைகள் என்பவற்றின் செயற்பாடுகளுக்கு தடையான விதத்தில் தாபிக்கப்படுகின்ற அலுவலகங்கள் அகற்றப்படும். எந்தவோர் கட்சி அலுவலகமும் தேர்த லுடன் தொடர்புடைய அரச நிறுவனங் களில் இருந்து 150 மீற்றருக்கு குறைந்த தூரத்தில் தாபிப்பதற்கு அனுமதி வழங் கப்படமாட்டாது. நகர சபைகளுக்கு 100 மீற்றர் வரையும் மாநகர சபைகளுக்கு 75 மீற்றர் வரையும் இதனைக்குறைக்க முடியும்.

தேர்தல் அலுவலகங்களுக்கு எதிரில் அல்லது அருகாமையில் அல்லது பொது விதிகளில் வாகன நெரிசல் ஏற்படக்க டியவாறு அல்லது பொதுமக்களுக்கு தடங்கள் ஏற்படக்கூடியவாறு வாகனங் களை நிறுத்தி வைப்பதையும், ஆதர வாளர்கள் பெருந்தொகையானோரை ஒன்று திரட்டுவதனையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தேர்தலை சுதந்திரமாக, நேர்மையாக நடாத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் ஒத் துழைப்பு வழங்க வேண்டும். ஒவ்வோரு வட்டார மக்களும் தங்களது வாக்களிப்பு நிலையங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

 கலந்துரையாடலில் அமைச்சர்கள் மஹிந்த அமரவீர மனோகணேஷன், பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா மற்றும் எம்.ஏ.சுமந்திரன், எம்.ரி.ஹசன் அலி, நஜா மொஹமட், பஷில் ராஜபக் ஷ, எஸ்.சுபைர்தீன், சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சி.டி.விக்ரமரத்ன, ருவன் குணசேகர, பத்தரமுல்ல சீலரத்னதேரர், பூரீநாத் பெரேரா, நயிமுல்லாஹ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post