பல் வேறு பட்ட சந்தர்பங்களில் சமுகத்திற்காக துணிந்து நின்று குரல் கொடுத்தவர் அதாஉல்லா அபிவிருத்தி என்றால் இது தான் என்று செயலில் செய்து காட்டிய செயல் வீரன் அரசியல் அரங்கின் உண்மையை யதார்த்த்தை சமுகத்திற்காக உரைக்க போய் பதவியையும் இழந்தார் என்பதால், இந்த இளைஞன் தேர்தல் கேட்க கூட தகுதியற்றவனா?
தனது தந்தை என்ன நோக்கத்திற்காக களம் இறக்கி இருக்கிறார் என்பதை கூட இவன் அறிந்திருக்க மாட்டான் அதற்க்குள் விமர்சனங்களை அள்ளி கொட்டுகிறீர்?
அதாஉல்லாஹ் களவு போன, கபளீகரம் செய்யப்பட்ட பிரதேச சபையை மீட்டு மாநாகராக்கி தனது மகனிடம் ஒப்படைக்கும் போது கூட விமர்சித்தோம்,,
இறுதியாக பல மில்லியன்களை மிகுதியாக வைத்து சபையை காப்பாற்றி தந்தான்.
இன்சா அல்லாஹ் நாம் நம்புகின்ற அரசியல் தலைமை எம்மை வழி காட்டியிருக்கிறது, வழி காட்டும் என பயணிக்கிறோம். நானும் கடந்த மாநகர சபையில் உறுப்பினராக இருந்தேன், இங்கே எழுதுவது போன்று அங்கே ஒன்றையும்,கிரீடங்களையும் காண வில்லை
அஸ்மி ஏ கபூர் - ஊடகப்பணிப்பாளர் (தேசிய காங்கிரஸ்)