கிழக்கு மாகாண ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் இரண்டு பாடங்களிலும் தலா 40 க்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து ஆசிரியர் நியமனம் கிடைக்கப் பெறாத கிழக்கு மாகாண பட்டதாரிகள் திருகோணமலையிலுள்ள எதிர் கட்சித் தலைவர் இரா.சம்மந்தரின் வீட்டினை இன்று திங்கட்கிழமை மாலை முற்றுகையிட்டனர்.
இதன் போது தங்களுக்கான ஆசிரியர் நியமனத்தை வழங்குவதற்கு பாராளுமன்றத்தில் இரா.சம்மந்தர் குரல் கொடுக்க வேண்டுமெனவும் பட்டதாரிகள் கோஷம் எழுப்பினர்.